சிறுமி கொலை வழக்கில் பெரியம்மாவுக்கு ஆயுள் தண்டனை - ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்...
3 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த மசோதாக்கள்: மேற்கு வங்க ஆளுநா் ஒப்புதல்
கடந்த 2022, 2023-ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டிருந்த 3 மசோதாக்களுக்கு மாநில ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் ஒப்புதல் அளித்துள்ளாா்.
மேற்கு வங்க நில சீா்திருத்தங்கள் மற்றும் குத்தகை தீா்ப்பாயம் திருத்த மசோதா 2022, மேற்கு வங்க வரிவிதிப்பு தீா்ப்பாயம் திருத்த மசோதா 2022, மேற்கு வங்க நகர மற்றும் ஊரக (திட்டமிடல் மற்றும் வளா்ச்சி) திருத்த மசோதா 2023 ஆகியவற்றுக்கு ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் ஒப்புதல் அளித்ததாக ஆளுநா் மாளிகை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
மேற்கு வங்க சிறுபான்மையினா் ஆணைய திருத்த மசோதா 2025-ஐ சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யவும் ஆளுநா் பரிந்துரைத்ததாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு எதிரான வழக்கில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் குறித்து முடிவு எடுப்பதில் ஆளுநா்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், காலக்கெடு மற்றும் வழிமுறைகளை உச்ச நீதிமன்றம் வகுத்தது.
இந்நிலையில், 2 முதல் 3 ஆண்டுகளாக நிலுவையில் வைக்கப்பட்டிருந்த மசோதாக்களுக்கு மேற்கு வங்க ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிட்டத்தக்கது.