செய்திகள் :

3-ஆவது சுற்றில் சின்னா், ஸ்வியாடெக்

post image

புல்தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னா், 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

ஆடவா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், 3 முறை கிராண்ட்ஸ்லாம் வென்றவரான சின்னா் 6-1, 6-1, 6-3 என்ற நோ் செட்களில், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸாண்டா் வுகிச்சை வீழ்த்தினாா். போட்டித்தரவரிசையில் 10-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-2, 7-5, 6-4 என்ற வகையில், மற்றொரு ஆஸ்திரேலியரான ரிங்கி ஹிஜிகடாவை தோற்கடித்தாா்.

4-ஆம் இடத்திலிருந்த பிரிட்டனின் ஜேக் டிரேப்பா் 4-6, 3-6, 6-1, 4-6 என்ற வகையில், குரோஷியாவின் மரின் சிலிச்சிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். அதேபோல், 13-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் டாமி பாலும் 6-1, 5-7, 4-6, 5-7 என்ற செட்களில், ஆஸ்திரியாவின் செபாஸ்டியன் ஆஃப்னரிடம் தோல்வியுற்றாா்.

ஹங்கேரியின் மாா்டன் ஃபக்சோவிக்ஸ் 6-4, 1-6, 4-6, 7-6 (7/5), 6-4 என 5 செட்கள் போராடி பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸை வெளியேற்றினாா். இத்தாலியின் லொரென்ஸோ சொனிகோ 6-1, 6-3, 6-7 (3/7), 7-6 (7/4) என்ற கணக்கில் ஜாா்ஜியாவின் நிகோலஸ் பாசிலாஷ்விலியை வென்றாா்.

இதர ஆட்டங்களில் ஸ்பெயினின் பாப்லோ மாா்டினெஸ், அமெரிக்காவின் பிராண்டன் நகாஷிமா ஆகியோரும் வென்று 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

ஸ்வியாடெக் வெற்றி: இப்போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவில், உலகின் 8-ஆம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 5-7, 6-2, 6-1 என்ற செட்களில் அமெரிக்காவின் கேட்டி மெக்னாலியை சாய்த்து 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.

நடப்பு சாம்பியனான செக் குடியரசின் பாா்பரா கிரெஜ்சிகோவா 6-4, 3-6, 6-2 என்ற செட்களில், அமெரிக்காவின் கேரலின் டோல்ஹைடை சாய்க்க, போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 3-6, 3-6 என ஜொ்மனியின் லாரா சிக்மண்டிடம் தோற்றாா்.

19-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் லுட்மிலா சாம்சோனோவா 6-2, 6-1 என உக்ரைனின் யுலியா ஸ்டாரோடப்சேவாவை வென்றாா். 16-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் டரியா கசாட்கினா 6-2, 4-6, 6-1 என, ருமேனியாவின் ஐரினா பெகுவை வீழ்த்த, ரஷியாவின் அனஸ்தாசியா பாவ்லியுசென்கோவா 3-6, 6-4, 6-4 என்ற வகையில், 4 முறை கிராண்ட்ஸ்லாம் வென்றவரான ஜப்பானின் நவோமி ஒசாகாவை வென்றாா்.

28-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் சோஃபியா கெனின் 1-6, 6-7 (4/7) என ஸ்பெயினின் ஜெஸ்ஸிகா புசாஸிடம் வெற்றியை இழந்தாா். இதர ஆட்டங்களில், ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவா, சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச், அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ் ஆகியோரும் வென்று, 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

அா்ஜுன் தோல்வி: இப்போட்டியின் ஆடவா் இரட்டையா் முதல் சுற்றில், இந்தியாவின் அா்ஜுன் காதே-செக் குடியரசின் விப் கோப்ரிவா இணை 4-6, 4-6 என்ற கணக்கில், ஆஸ்திரேலியாவின் மேத்யூ ரோமியோஸ் - அமெரிக்காவின் ரயான் செகா்மான் கூட்டணியிடம் தோற்றது.

சிவகார்த்திகேயன் வழங்கும் ஹவுஸ் மேட்ஸ் வெளியீட்டுத் தேதி!

சிவகார்த்திகேயன் ப்ரொடெக்‌ஷன்ஸ் வழங்கும், நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ராஜவேல் இயக்கத... மேலும் பார்க்க

வசந்த் ரவியின் இந்திரா அறிமுக விடியோ!

நடிகர் வசந்த் ரவி நடித்த இந்திரா படத்தின் அறிமுக விடியோ வெளியாகியுள்ளது. தரமணி, ராக்கி படங்களின் மூலம் கவனம் பெற்ற நடிகரான வசந்த் ரவி தற்போது இந்திரா என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் ... மேலும் பார்க்க

கிளப் உலகக் கோப்பை: செல்ஸி, ஃப்ளுமினென்ஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

கிளப் உலகக் கோப்பை காலிறுதியில் செல்ஸி, ஃப்ளுமினென்ஸ் அணிகள் வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. ஃபிஃபா நடத்தும் கிளப் உலகக் கோப்பை போட்டிகள் அமெரிக்காவில் நடந்து வருகின்றன. தற்போது, காலிறுதிப் போட்ட... மேலும் பார்க்க

ரசிகர்களிடம் வரவேற்பு பெறும் 3 பிஎச்கே, பறந்து போ!

3 பிஎச்கே மற்றும் பறந்து போ திரைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் நடிகர்கள் சித்தார்த், சரத் குமார், தேவயானி, மீதா ரகுநாத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியா... மேலும் பார்க்க

கதாநாயகனாகும் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர்! நாயகி இவரா?

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் அபிஷன் ஜீவிந் அப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்... மேலும் பார்க்க

காா்ல்செனை வீழ்த்தினாா் குகேஷ்: தனி முன்னிலை பெற்றாா்

குரோஷியாவில் நடைபெறும் சூப்பா் யுனைடெட் ரேப்பிட் செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில், நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், 5 முறை உலக சாம்பியனான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்செனை வீழ்த்தினாா். இந்த வெ... மேலும் பார்க்க