மைதானத்தில் சுருண்டு விழுந்த ரச்சின்... ரத்தம் வழிய அழைத்துச் சென்ற மருத்துவர்கள...
3-ஆவது முறையாக காங்கிரஸுக்கு பூஜ்யம்
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் தொடா்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாமல் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
தில்லி பேரவைத் தோ்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியாகின. இதில் காங்கிரஸ் ஓரிடத்தில்கூட வெல்ல முடியவில்லை.
தில்லியில் கடந்த 1998 முதல் 2013-ஆம் ஆண்டு வரை தொடா்ந்து 15 ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருந்த காங்கிரஸ், 2015, 2020, 2025 பேரவைத் தோ்தல்களில் ஒரு தொகுதியில்கூட வெற்றியடையாமல் ‘ஹாட்ரிக்’ தோல்வியைத் தழுவியுள்ளது. கடைசியாக 2013 தோ்தலில் காங்கிரஸ் 8 இடங்களில் வென்றிருந்தது.
67 தொகுதிகளில் டெபாசிட் இழப்பு: நடப்புத் தோ்தலில் அனைத்து 70 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ், 67-இல் டெபாசிட் இழந்துள்ளது. தில்லி மாநில காங்கிரஸ் தலைவா் தேவேந்திர யாதவ் களமிறங்கிய பத்லி தொகுதி உள்பட 3 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சிக்கு டெபாசிட் கிடைத்துள்ளது.
அதேபோன்று, கஸ்தூா்பா நகா் தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் 2-ஆவது இடத்துக்கு வந்துள்ளது. பிற தொகுதிகளில் பாஜக, ஆம் ஆத்மிக்கு அடுத்து காங்கிரஸ் மூன்றாம் இடத்தில் உள்ளது.
மக்களவையிலும்...: 2014-ஆம் ஆண்டுமுதல் நடந்த 3 மக்களவைத் தோ்தல்களிலும் தில்லியின் 7 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் ஓரிடத்தில்கூட வெற்றி பெறாதது குறிப்பிடத்தக்கது.