செய்திகள் :

3-வது அதிவேக சதம் விளாசிய ஹாரி ப்ரூக்; வெற்றியை நோக்கி இங்கிலாந்து!

post image

இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய மூன்றாவது இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை ஹாரி ப்ரூக் படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்று வருகிறது.

374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. ஆட்டத்தின் நான்காம் நாளான இன்று (ஆகஸ்ட் 3) இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 300 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறது.

கைவசம் விக்கெட்டுகள் மீதமிருக்க இங்கிலாந்தின் வெற்றிக்கு மிகவும் குறைவான ரன்களே தேவைப்படுகின்றன. இங்கிலாந்து தரப்பில் இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஸாக் கிராலி 14 ரன்கள், பென் டக்கெட் 54 ரன்கள் எடுத்தனர். கேப்டன் ஆலி போப் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

3-வது அதிவேக சதம்

கேப்டன் ஆலி போப் ஆட்டமிழந்த பிறகு, ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடியது.

அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி ப்ரூக் 91 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம், இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய மூன்றாவது இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

இதற்கு முன்பாக, ஜேமி ஸ்மித் 80 பந்துகளிலும், பென் டக்கெட் 88 பந்துகளிலும் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் சதம் விளாசியுள்ளனர். அந்த வரிசையில் தற்போது 3-வது இடத்தை ஹாரி ப்ரூக் பிடித்துள்ளார்.

ஹாரி ப்ரூக்குடன் மறுமுனையில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட்டும் சதத்தினை நெருங்கி வருகிறார்.

அதிரடியாக விளையாடிய ஹாரி ப்ரூக் 98 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்த ஜேசன் ஹோல்டர்!

Harry Brook has become the third Englishman to score the fastest century in Tests against India.

நான் பார்த்த மிகச் சிறந்த டெஸ்ட் தொடர் இதுதான்: இங்கிலாந்து பயிற்சியாளர்

இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடர் குறித்து இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் பேசியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடை... மேலும் பார்க்க

ஏமாற்றமளித்தாலும் நியாயமான முடிவே கிடைத்துள்ளது: பென் ஸ்டோக்ஸ்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல முடியாதது ஏமாற்றமளித்தாலும், நியாயமான முடிவே கிடைத்துள்ளதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இட... மேலும் பார்க்க

இந்திய அணியின் த்ரில் வெற்றியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம்!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள்... மேலும் பார்க்க

சிராஜ்: இந்திய கிரிக்கெட்டின் அகராதியிலிருந்து மறையும் பணிச்சுமை!

பணிச்சுமை குறித்து முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர், “சிராஜ் பந்துவீச்சினால் இனிமேலாவது இந்த வார்த்தை இந்திய கிரிக்கெட்டின் அகராதியிலிருந்து மறையுமென நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார். ஆண்டர்சன் - ... மேலும் பார்க்க

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டின் கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட... மேலும் பார்க்க

தெலங்கானாவின் பெருமை... டிஎஸ்பி சிராஜை வாழ்த்திய காவல்துறை!

தெலங்கானா காவல்துறை இந்திய வீரர் முகமது சிராஜ் குறித்து நெகிழ்ச்சியாக வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹைதராபாதைச் சேர்ந்த முகமது சிராஜ் (31 வயது) இந்திய டெஸ்ட் அணிக்காக 2020 ... மேலும் பார்க்க