`46 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டோம்’ தற்கொலை பெட்டியில் மரணமடைய பதிவு செய்துள்ள தம்பதி - ஏன்?
தற்போதைய உலகில் மரணத்திற்கான நேரத்தை தானே குறித்துக்கொள்ளும் செயல் சர்ச்சையான விவாதங்களில் ஒன்றாக உள்ளது.
ஸ்விட்சர்லாந்து மற்றும் கனடா போன்ற சில நாடுகளில் இது சட்டபூர்வமாக இருந்தாலும் பிரிட்டன், இந்தியா உட்பட பல நாடுகளில் மரணத்தை தனக்குத்தானே தீர்மானித்துக் கொள்வது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை.
இந்த நிலையில் பிரிட்டனை சேர்ந்த தம்பதி தற்கொலை பெட்டியில் தங்களின் மரணத்தை உறுதி செய்வதற்காக தி லாஸ்ட் ரிசார்ட் நிறுவனத்தில் பதிவு செய்துள்ளனர்.
News.com AU அறிக்கையின்படி ஓய்வு பெற்ற ஆர்ஏஎப் பொறியாளரான பீட்டர் ஸ்காட் (86) அவரது மனைவி கிறிஸ்டின் (80) தற்கொலை பெட்டியை பயன்படுத்தி தங்கள் வாழ்க்கையை முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஏன் தற்கொலை பெட்டியை பயன்படுத்தி மரணத்தை விரும்புகின்றனர் என்பதற்கான காரணத்தை கூறும்போது, `தங்களுக்கு திருமணம் ஆகி 46 ஆண்டுகள் ஆவதாகவும் கிறிஸ்டினுக்கு வாஸ்குலர் டிமென்ஷியா நோய் இருக்கிறது’ என கூறுகிறார் பீட்டர் ஸ்காட்
வாஸ்குலர் டிமென்ஷியா என்பது மூளையின் ரத்த நாளங்களை சேதப்படுத்தி நினைவாற்றல், சிந்தனை ஆகியவற்றில் குறைபாடு ஏற்படுத்தி,மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை குறைத்து ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை இழக்க செய்யும் நோயாகும்.
இந்த நோயை குணப்படுத்த முடியாது. ”நாங்கள் நீண்ட மகிழ்ச்சியான ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டோம். ஒருவரை பிரிந்து எங்களால் இருக்க முடியாது”.. எனவே மரணத்தை தீர்மானிக்கும் பெட்டியை தேர்வு செய்ததாக பீட்டர் கூறியிருக்கிறார்
தி லாஸ்ட் ரீசெட் என்ற ஸ்வீட்ஸ் அமைப்பு சார்கோ பேட் மூலம் மரணத்தை கொடுக்கிறது. மரண பெட்டி போல் இருக்கும் இதில் மரணத்தை விரும்புவார் அதில் படுத்தவுடன் நைட்ரஜனை வெளியிட்டு ஆக்சிஜன் அளவை குறைப்பதன் மூலமாக விரைவான மரணத்தை அவர்களுக்கு கொடுக்கும் ஒரு கேப்சூல் போன்ற சாதனம் தான் சாக்கோ பேட்.
இந்தியாவில் இது சட்டபூர்வமானதா?
சுவிட்சர்லாந்து மற்றும் கனடா போன்ற சில நாடுகளில் இருப்பது போல இந்தியாவில் தன்னார்வ மரணத்தை விரும்புவது என்பது சட்டபூர்வமானது இல்லை.
ஆனால் 2018 ஆம் ஆண்டு ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பில் இந்திய உச்ச நீதிமன்றம் சில குறிப்பிட்ட சூழலில் கருணைக்கொலையை அனுமதித்துள்ளது அதன்படி நோய்வாய்ப்பட்ட அல்லது மூளைச்சாவடைந்த நோயாளிகளுக்கு கடுமையான விதிமுறைகளின் படி கருணை கொலை அங்கீகரிக்கப்பட்டாலும் இந்தியாவில் கருணை கொலை இன்றும் சட்டவிரோதமாகவே உள்ளது.
