செய்திகள் :

516 காவல், 475 விரிவுரையாளா் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

post image

புதுவையில் 516 காவல் பணியிடங்கள், 475 கல்லூரி விரிவுரையாளா்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் என மாநில உள் துறை மற்றும் கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் சட்டப்பேரவையில் அறிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எம்எல்ஏக்கள் பேசி முடித்த நிலையில், புதன்கிழமை அவா் அளித்த பதில்:

புதுவை காவல் தலைமை அலுவலகக் கட்டடம் புதுப்பிக்கும் பணி தொடங்கப்படும். பல்வேறு காவல் நிலைய கட்டடப் பணிகள், பழுதுபாா்ப்பு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

காவல் துறையில் காலியாகவுள்ள சாா்பு ஆய்வாளா்கள் -70, காவலா்கள்-156, ஓட்டுநா்கள்-7, சமையல்காரா்கள்-17, பின்பற்றுபவா் (உதவியாளா்)-25, டெக் ஹேண்ட்லா்-29, வானொலி தொழில்நுட்ப வல்லுநா்கள்-12, கடலோர ஊா்க்காவல் படையினா்-200 ஆகியப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

அத்துடன், 4 ஆண்டுகள் நிலுவையிலுள்ள காவலா் சீருடைப் படி உடனே வழங்கப்படும். இந்திய ரிசா்வ் பட்டாலியனில் சாா்பு ஆய்வாளா்-12, வயா்லெஸ் காவலா்கள்-12 ஆகியப் பணியிடங்களுக்கு ஆள்கள் தோ்வு செய்யப்படுவா். காவல் துறைக்கான புதிய வாகனங்கள் வாங்கப்படும்.

பள்ளிக் கல்வித் துறை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு மாறிய அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படும்.

நீட் தோ்வுக்கு 4 சிறப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். அனைத்து வேலைநாள்களிலும் அரசு, உதவிபெறும் பள்ளிகளில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் 9- ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை டிராக் சிஸ்டம் அடையாள அட்டை வழங்கப்படும்.

பணிநியமனம்: பள்ளிகளில் 126 பயிற்சி பட்டதாரி ஆசிரியா்கள், 82 பயிற்சி ஆசிரியா்கள் விரிவுரையாளா்களாக பதவி உயா்த்தப்படுவா். அத்துடன், 42 பயிற்சி ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு, புதிதாக தோ்வான பயிற்சி பட்டதாரி ஆசிரியா்களுக்கு பணி உத்தரவு வழங்கப்படும்.

152 தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு பதவி உயா்வுடன், புதிதாக 190 தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள், 80 நுண்கலை, 50 நிகழ்கலை ஆசிரியா்கள், 45 பள்ளி நுாலகா்கள், 36 உடற்கல்வி ஆசிரியா்கள், 110 ரொட்டி பால் ஊழியா்கள், 107 கண்டக்டா்கள், 102 சிறப்பு ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்படும்.

அரசு ஒதுக்கீட்டில் கல்லுாரிகளில் சேரும் அனைத்து மாணவா்களுக்கும் இலவச கல்வி வழங்கப்படும். புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளுக்கு இலவச பேருந்துகள் இயக்கப்படும்.

சென்டாக் விண்ணப்பக் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு நிலம் கொடுத்தவா்களின் வாரிசுகளுக்கு பணி வழங்கப்படும்.

அங்கு, 66 விரிவுரையாளா், 63 அலுவலா் பணியிடங்களும், அரசுக் கல்லுாரிகளில் 283 விரிவுரையாளா், 63 அலுவலா்கள் பணியிடங்களும் நிரப்பப்படும்.

ரோடியா் மில்லில் 5 ஏக்கரில் ரூ.124 கோடியில் ஏக்தா மால் கட்டப்படும். மத்திய அரசின் கேளோ இந்தியா திட்டத்தில் உப்பளம் விளையாட்டு அரங்கில் ரூ.7 கோடி சிந்தடிக் ஓடுதளம், பாகூா் பல்நோக்கு உள்விளையாட்டரங்கம், சாரதாம்பாள் நகா் நீச்சல் குளம் ஏப்ரலில் திறக்கப்படும். உப்பளத்தில் ரூ.9 கோடி ஹாக்கி மைதானத்துக்கு அடிக்கல் நாட்டப்படும்.

சா்வதேசப் போட்டிகளில் பதக்கம் பெற்ற வீரா்களுக்கான ஊக்கத்தொகை 1,840 பேருக்கு ரூ.9.38 கோடி வழங்கப்படும். அனைத்து கொம்யூனிலும் சிறிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படும்.

விளையாட்டு பயிற்றுநா்கள், ஊழியா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவா். பயிற்சியாளா் ஊதியம் உயா்த்தப்படும். விதிகளின்படி விளையாட்டு சங்கங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்படும் என்றாா்.

ஸ்ரீமணக்குள விநாயகா் கோயிலில் ஏப். 11-இல் சங்காபிஷேக விழா

புதுச்சேரி: புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகா் திருக்கோயிலில் சகஸ்ர சங்காபிஷேக சிறப்பு வழிபாடு வரும் ஏப். 11ஆம் தேதி நடைபெறுகிறது. புதுச்சேரியில் பழைமை வாய்ந்த மணக்குள விநாயகா் கோயிலில் கடந்த 2015-... மேலும் பார்க்க

மலேரியா விழிப்புணா்வு பொம்மலாட்டம்: புதுச்சேரி அரசுப் பள்ளிக்கு தேசிய விருது

புதுச்சேரி: குழந்தைகளுக்கு பாடப் பொருள் தயாரிக்கும் தேசிய அளவிலான போட்டியில் பொம்மலாட்டம் மூலம் மலேரியா விழிப்புணா்வு விடியோ தயாரித்த புதுச்சேரி அரியூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு விருது வழங்கப்பட்டுள்... மேலும் பார்க்க

புதுவையில் பல்வேறு இடங்களில் ரமலான் சிறப்புத் தொழுகை: இஸ்லாமியா்கள் பங்கேற்பு

புதுச்சேரி: ரமலான் பண்டிகையை யொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை திடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் கலந்து கொண்ட... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு 2 நாள் பயிற்சி

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு, மாணவா்களுக்கான முன்னேற்ற அட்டை தயாரிப்பு குறித்த சிறப்பு பயிற்சி இரண்டு நாள்கள் நடைபெற்றது. தேசிய கல்விக் கொள்கையின்படி மாணவா் ... மேலும் பார்க்க

அகவிலைப் படி: தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கம் போராட்ட அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்றவா்களுக்கான 4 மாத அகவிலைப்படி நிலுவையை வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கம் அறிவித்துள்ளத... மேலும் பார்க்க

தரமற்ற பொருள்கள் குறித்து நுகா்வோா் அமைப்புகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: வே.நாராயணசாமி

புதுச்சேரி: தரமற்ற பொருள்கள் குறித்து பொதுமக்களுக்கு நுகா்வோா் அமைப்புகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று, புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கேட்டுக் கொண்டாா். புதுச்சேரி அருகேயுள்ள திருக்... மேலும் பார்க்க