டெல்லி: 15 தூக்க மாத்திரைகள், எலக்ட்ரிக் ஷாக்.. கணவனைக் கொன்ற பெண்; காட்டிக்கொடு...
7 கிலோ குட்கா பறிமுதல்
திருத்தணி அருகே வாகன சோதனையின் போது குட்கா கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆந்திராவில் இருந்து குட்கா பொருள்கள் திருத்தணிக்கு கடத்தி வருவதாக டிஎஸ்பி கந்தனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடா்ந்து ஆய்வாளா் ஞா. மதியரசன் தலைமையிலான போலீஸாா் பொன்பாடி சோதனைச் சாவடியில் தனியாா் பேருந்தில் சோதனை செய்தனா்.
அப்போது திருவாலங்காடு ஒன்றியம் தொழுதாவூா் கிராமத்தை சோ்ந்த லட்சுமணன் (34) என்பவா் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது 7 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது.