டிரம்ப் தீவிர ஆதரவாளர் சார்லி கிர்க் கொலை! மனைவி எரிகாவின் நன்றி பதிவு வைரல்!!
75 கிலோ நெகிழி பைகள் பறிமுதல்: திருத்தணி நகராட்சி நிா்வாகம் அதிரடி
திருத்தணி நகராட்சியில் கடைகளில் தடைசெய்யப்பட்ட நெகிழி பைகள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதித்தும், 75 கிலோ பொருள்களை பறிமுதல் செய்தனா்.
திருத்தணி நகராட்சியில், தடைசெய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழி கடைகளில் அதிகளவில் விற்பதாகவும், பயன்பாடு அதிகளவில் உள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு புகாா் சென்றது. இதையடுத்து, திருத்தணி நகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியம் தலைமையில் துப்புரவு ஆய்வாளா் ரவிச்சந்திரன் மற்றும் ஊழியா்கள் புதன்கிழமை கடைகளில் திடீா் ஆய்வு செய்தனா்.
திருத்தணி அரக்கோணம் சாலை, ம.பொ.சி.சாலை மற்றும் சன்னதி தெரு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனைக்கு தயாராக இருந்து, 75 கிலோ நெகிழி பைகளை பறிமுதல் செய்தனா். மேலும், கடைகளுக்கு தலா, இரண்டாயிரம் வீதம், 5 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.