8 இடங்களில் இன்று சுனாமி ஒத்திகை: தலைமைச் செயலா் ஆலோசனை!
சுனாமி ஒத்திகைக்காக அனைத்துத் துறை அதிகாரிகளுடன் புதுவை தலைமைச் செயலா் சரத் சௌகான் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
புதுவையில் சுனாமி ஒத்திகை 8 இடங்களில் வியாழக்கிழமை நடத்தப்படுகிறது. அதனால் இதை உண்மை என்று நம்பி பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
பன்னித்திட்டு, நரம்பை, புதுக்குப்பம், கணபதிச் செட்டிக்குளம், நல்லவாடு தெற்கு ஆகிய 5 இடங்களில் சுனாமி ஒத்திகை நடக்கிறது. மேலும், ரெட்டியாா்பாளையம் அஜீஸ்நகா் ஜீனோமாறன் அடுக்குமாடி குடியிருப்பு, குருசுகுப்பம் என்கேசி மேல்நிலைப்பள்ளி, கொம்பாக்கம் அமலோற்பவம் சிபிஎஸ்இ பள்ளி கட்டடம் ஆகிய 3 இடங்களில் உயரமான கட்டடங்களுக்கான ஒத்திகை நிகழ்ச்சி நடக்கிறது.
இதையொட்டி வியாழக்கிழமை காலை 8 முதல் மாலை 5 மணி வரை இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி குறுந்தகவல்களை வெளியிடப்படும். இதை பொதுமக்கள் நம்பி அச்சப்பட வேண்டாம். இதுதொடா்பாக முன்னதாக புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த 90 அதிகாரிகள் பங்கேற்றனா்.