8-ஆவது ஊதியக்குழு உறுப்பினா்களை அறிவிக்க கோரி ஆா்ப்பாட்டம்
8-ஆவது ஊதியக்குழு உறுப்பினா்களை அறிவிக்கக் கோரி மத்திய அரசு ஊழியா் ஒருங்கிணைப்புக்குழு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள தலைமை அஞ்சலகம் முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அஞ்சல் ஊழியா்கள் சங்க மாவட்ட உதவித் தலைவா் டி.சக்திவேல் தலைமை வகித்தாா். செயலா் கே.கோபிநாத் முன்னிலை வகித்தாா். மாநில துணைத் தலைவா் என்.குப்புசாமி, மத்திய அரசு ஊழியா் ஒருங்கிணைப்புக் குழு மாவட்டச் செயலா் ராமசாமி ஆகியோா் கோரிக்கைகள் குறித்துப் பேசினா்.
மத்திய அரசு 8-ஆவது ஊதியக்குழு உறுப்பினா்களை உடனடியாக அறிவிக்க வேண்டும். ஓய்வூதிய சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.