பேரவைத் தோ்தலுக்காக திமுக மறைமுக பணப்பட்டுவாடா?: கே.பி.ராமலிங்கம் குற்றச்சாட்டு
800 நாள்களை நிறைவு செய்த மதிய நேரத் தொடர்!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மதிய நேரத் தொடர் 800 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகிவருகிறது.
சாம்பவி குருமூர்த்தி மற்றும் நந்தன் லோகநாதன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இலக்கியா தொடர், 800 நாள்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
மக்களைக் தக்கவைக்கும் வகையிலான கதையம்சமும், கவரும் வகையிலான நடிகர்களின் நடிப்பும் இலக்கியா தொடருக்கான ரசிகர்களைத் தொடர்ந்து அதிகரிக்கச் செய்துவருகிறது.
முதன்மை நடிகர்களுடன் சுஷ்மா நாயர், காயத்ரி சேஷாத்ரி, ராஜேஸ்வரி, பரத் கல்யாண், ஆகியோரும் இத்தொடரின் வெற்றிக்கு காரணமான முக்கியமான பாத்திரங்களை ஏற்று நடித்து வருகின்றனர்.
எதிர்பாராதவிதமான இலக்கியாவுக்கு நடக்கும் திருமணமானது கெளதம் என்ற இளைஞரின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைத்து, குடும்ப வாழ்க்கையிலும், சொந்தத் தொழிலும் மேம்படுத்துகிறது என்பதை மையமாக வைத்து இலக்கியா தொடரின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இலக்கியாவை வெறுப்பவராக இருந்தாலும், படிப்படியாக இலக்கியாவின் பொறுமை, அன்பு, சுயநலமின்மை போன்றவற்றை கெளதம் உணரத் தொடங்கி, இலக்கியாவுக்கு மனைவியாக அங்கீகாரம் கொடுத்து, வாழ்கையை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்துகிறார் கெளதம்.
தற்போது இந்தத் தொடர் 800 நாள்களை நிறைவு செய்துள்ளது. இதனால், குழுவினர் கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகின்றனர். பாரதி தம்பி திரைக்கதையில் பழனிசாமி வசனம் எழுத, நட்ராஜ் இத்தொடரை இயக்குகிறார். திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு இந்தத் தொடர் ஒளிபரப்பாகிறது.