செய்திகள் :

90 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசு அறிவித்த 'சாதிவாரி கணக்கெடுப்பு'; அதன் விளக்கமும், தேவையும்!

post image

எதிர்க்கட்சிகளின் நீண்ட நாள் கோரிக்கையான 'சாதிவாரி கணக்கெடுப்பிற்கு' மத்தியில் ஆளும் பாஜக அரசு செவி சாய்த்துவிட்டது.

டெல்லியில் நேற்று நடந்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, 'சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்' என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தெரிந்துகொள்வதற்கு முன்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து முதலில் தெரிந்துகொள்வோம்.

கடைசியாக, 2011-ம் ஆண்டு இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அடுத்ததாக 2021-ம் ஆண்டு இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளிப்போன மக்கள் தொகை கணக்கெடுப்பு, இதுவரை எடுக்கப்படவே இல்லை.

மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், இப்போது அது எடுக்கப்பட உள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு
மக்கள் தொகை கணக்கெடுப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்பு என்றால் என்ன?

மக்கள் தொகை - பெயரிலேயே குறிப்பிடப்பட்டிருப்பதுப்போல, மக்கள் தொகையைக் கணக்கெடுப்பதே இந்தக் கணக்கெடுப்பு ஆகும்.

இந்தக் கணக்கெடுப்பு ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும்.

1872-ம் ஆண்டு முதன்முதலாக தொடங்கப்பட்ட இந்தக் கணக்கெடுப்பு, இதுவரை 15 முறை எடுக்கப்பட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் என்ன?

எத்தனை சாதிகள் உள்ளன?, அதன் பொருளாதார பின்னணி என்ன? அவர்களின் கல்வித்தகுதி எப்படி இருக்கிறது? போன்று சாதி அடிப்படையில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுவதே சாதிவாரி கணக்கெடுப்பு ஆகும்.

பிரிட்டிஷ் ஆட்சியின் போது, சாதி சம்பந்தப்பட்ட தரவுகள் ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போதும் சேகரிக்கப்பட்டது. ஆனால், சுதந்திரத்திற்கு பிறகு, 1951-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு போதிலிருந்து இந்த நடைமுறையை நிறுத்திவிட்டது மத்திய அரசு.

நான்கு வகைகள்!

சாதிவாரி கணக்கெடுப்பு
சாதிவாரி கணக்கெடுப்பு

பட்டியலின பழங்குடியினர் (ST), பட்டியலின சாதியினர் (SC), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொதுப்பிரிவு என சாதிகளை இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, இந்திய அரசு வரையறுத்துள்ளது.

1951-ம் ஆண்டிலிருந்து, இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பட்டியலின சாதியினர், பட்டியலின பழங்குடியினர், இந்து, முஸ்லீம் போன்ற மத அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.

இப்போது இருக்கும் சாதிவாரி கணக்கு தரவுகளின் என்ன சிக்கல்?

இப்போது நம்மிடம் இருக்கும் சாதிவாரி தரவுகள் 1931-ம் ஆண்டு எடுக்கப்பட்டது ஆகும். 1941-ம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் போது, சாதி வாரி தரவுகள் எடுக்கப்பட்டாலும், அவை வெளியிடப்படவே இல்லை.

மேலே குறிப்பிடப்பட்டது போல, ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது, பட்டியலின சாதியினர், பட்டியலின பழங்குடியினர், மதம் போன்றவற்றை மட்டும் கணக்கெடுத்திருப்பது பொருளாதார கொள்கைகள், கல்வி கொள்கைகள் போன்றவற்றை அரசு வரையறுக்கும்போது மிகவும் சிரமமாகிவிடுகிறது.

சாதிவாரி கணக்கெடுப்பு
சாதிவாரி கணக்கெடுப்பு

மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கக்கூடாதா?

1961-ம் ஆண்டு முதல், மாநில அரசு தங்களுடைய சொந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்பு வரையறையும் மேற்கொள்ளலாம் என்ற உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

எப்போது கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது?

அதுக்குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`Award-களை அள்ளிய மஞ்சுவிரட்டு படம்' - Suresh Kumar Interview! | Photographers Diary

'மஞ்சுவிரட்டில் எடுத்த புகைப்படம், மழை வெள்ள காலத்தில் பீச்சில் கிரிக்கெட் விளையாடியவர்களை எடுத்த படம்' என சர்வதேசளவில் பல்வேறு விருதுகளை அள்ளி வந்துள்ளார் The Times of india Assistant Photo Editor C.... மேலும் பார்க்க

சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசு முன் நிற்கும் மிகப்பெரிய சவால்கள் என்னென்ன?

இதுவரை, 'சாதிய பிளவு ஏற்பட்டுவிடும்' என்று கூறிவந்த பாஜக அரசே, அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, சாதிவாரி கணக்கெடுப்பும் எடுக்கப்படும் என்று நேற்று அறிவித்துள்ளது. இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப... மேலும் பார்க்க

``என் பிரதமர் மோடிஜி மீது நம்பிக்கை உள்ளது; அவர் ஒரு போராளி..'' - நடிகர் ரஜினிகாந்த்

மும்பையில் இன்று முதல் நான்கு நாள்களுக்கு திரைத்துறையை சார்ந்த WAVES 2025 (World Audio Visual and Entertainment Summit) நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் திரைத்துறை பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலர் கலந்... மேலும் பார்க்க

Vijay: அரசியல்வாதியாக முதல் செய்தியாளர் சந்திப்பு; மதுரை மக்கள் பற்றி விஜய் என்ன பேசினார்?

மதுரை புறப்பட்ட தவெக கட்சியின் தலைவர் விஜய் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அரசியல்வாதியாக முதன்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார் விஜய். இந்த சந்திப்பில் தன்னுடைய பயண திட்ட... மேலும் பார்க்க

நயினார் கொடுத்த Files! டெல்லி சீக்ரெட்ஸ்! Udhayanidhi-யின் வித்தியாசமான Plan! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,தேமுதிக இளைஞரணி பொறுப்புக்கு வந்திருக்கும் விஜய பிரபாகரன். இதன் பின்னணியில் பிரேமலதாவின் மூன்று முக்கியமான மூவ். டெல்லிக்கு பறந்த நயினார் நாகேந்திரன் அங்கே மோடியிடம் கொடுத்த ... மேலும் பார்க்க