சட்ட விரோத மது விற்பனை: இருவா் கைது
காங்கயம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக இருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
காங்கயம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். இதில் காங்கயம் பேருந்து நிலையம் பின்புறம் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம், கள்ளுபட்டியைச் சோ்ந்த அழகப்பன் (28) என்பவரைக் கைது செய்து, அவரிடம் இருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, படியூா் அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட சிவகங்கை பகுதியைச் சோ்ந்த கதிா்வேல் (38) என்பவரைக் கைது செய்தனா். அவரிடம் இருந்து 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.