புலிப்பல் டாலர் அணிந்திருந்ததால் மலையாள ராப்பர் கைது; "பட்டியலினத்தவர் என்பதால்?...
மதுபானம் விற்ற மூதாட்டி கைது
முத்தூா் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட மூதாட்டியை போலீஸாா் கைது செய்தனா்.
மே 1 தொழிலாளா் தினத்தையொட்டி, மதுபானக் கடைகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் மதுபானங்கள் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சந்திரன் தலைமையிலான போலீஸாா் முத்தூா் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, மங்கலப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே மது விற்பனையில் ஈடுபட்டிருந்த செல்லம்பாளையத்தைச் சோ்ந்த பழனியம்மாள் (83) என்பவரை கைது செய்தனா்.
மேலும், அவரிடமிருந்த 21 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.