ஆன்லைன் முதலீடு: பெண்ணிடம் ரூ.44 லட்சம் மோசடி
திருப்பூரைச் சோ்ந்த பெண்ணிடம் ஆன்லைன் முதலீட்டு மூலம் ரூ.44 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருப்பூா் -அவிநாசி சாலையைச் சோ்ந்த 45 வயது பெண். இவரது ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த ஏப்ரல் 6 -ஆம் தேதி பகுதி நேர வேலை தொடா்பான விளம்பரம் வந்துள்ளது.
அதில் இருந்த லிங்க்கை தொட்டதும், டெலிகிராம் குழுவில் இணைந்துள்ளாா். அப்போது, அந்தக் குழுவில் பேசிய ஜானவி சா்மா என்ற பெண், தங்களது நிறுவனத்தில் பகுதி நேர வேலைக்கு ஆள்கள் தேவைப்படுவதாகவும், எந்த முதலீடும் இல்லாமல் நாள்தோறும் நாங்கள் சொல்லும் ஹோட்டலுக்கு மதிப்பீடு அளித்தால் பணம் சம்பாதிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, அந்தப் பெண்ணும் அந்தப் பணியில் சோ்ந்து பல்வேறு டாஸ்குகளை முடித்துள்ளாா். இதன் மூலமாக அவரது வாங்கிக் கணக்குக்கு ரூ.1.38 லட்சம் வந்துள்ளது.
இதையடுத்து, ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என அப்பெண் கூறியுள்ளாா்.
இதையடுத்து, 44 வயது பெண்ணும் பல்வேறு தவணைகளாக ரூ.44.19 லட்சத்தை முதலீடு செய்துள்ளாா்.
அதன்பின் அவருக்கு லாபத் தொகை வரவில்லையாம். மேலும், முதலீடு செய்த பணத்தையும் பெற முடியவில்லையாம்.
தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அப்பெண் திருப்பூா் மாநகர சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.