இலங்கையில் பள்ளத்தில் கவிழ்ந்த பயணிகள் பேருந்து! 15 பேர் பலி!
ADMK: ``செங்கோட்டையன் சொல்வது நல்லதுதான்; அரசியலில் எதுவும் நடக்கலாம்'' - பாஜக நயினார் நாகேந்திரன்
செங்கோட்டையை செய்தியாளர்களைச் சந்தித்து, "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன்" என்று கறாராகப் பேசியிருக்கிறார்.
சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரும் 'அதிமுக ஒன்றிணைய வேண்டும்' என்ற இதே கருத்தை கூறிவரும் நிலையில், செங்கோட்டையனும் இதை வழிமொழிந்து பேசியிருப்பது அதிமுக தொண்டர்களிடையே பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது.
இந்நிலையில் இதுகுறித்துப் பேசியிருக்கும் நயினார் நாகேந்திரன், "அனைவரையும் ஒருங்கிணைக்க செங்கோட்டையன் முயற்சி செய்வது நல்ல விஷயம். அரசியலில் எதுவுமே நிரந்தரமாக இருக்காது. கடைசி ஒரு மாதத்தில் கூட நிறைய மாற்றங்கள் ஏற்படும். எல்லாரும் ஒற்றுமையாக இருந்தால் திமுக ஆட்சியை நிச்சயம் அகற்றலாம்" என்று செங்கோட்டையனுக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs