Ajithkumar: `Game Starts' - துபாய் ரேஸில் ஜெயித்த அஜித் -குவியும் வாழ்த்துகள்
துபாயில் நடந்து முடிந்திருக்கும் 24H ரேஸில் அஜித் குமாரின் ரேஸிங் அணி 922 போர்ஷே பிரிவில் 3ம் இடம் பிடித்திருக்கிறது.
துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸில் அஜித் கலந்துக்கொண்டிருந்தார். கார் ரேஸ் தொடங்குவதற்கு முன் பயிற்சியின் போது அஜித் விபத்தில் சிக்கினார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்பட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்த கார் ரேஸுக்காக தனது உடல் எடையைக் கூட அஜித் குறைத்திருக்கிறார். அந்தளவிற்கு கார் ரேஸ் மீது ஆர்வம் கொண்ட அஜித், ஒரு கட்டத்தில் கார் ரேஸிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
ஆனால், அவர் சொல்லி கொஞ்ச நேரத்திலேயே மீண்டும் கார் ரேஸில் கலந்து கொண்டது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்நிலையில் இன்று நடைபெற்ற 24H ரேஸில் அஜித் குமார் ரேஸிங் அணி 922 போர்ஷே பிரிவில் 3ம் இடம் பிடித்து இருக்கிறது. இந்த வெற்றியை அஜித் தேசியக்கொடியை ஏந்திக் கொண்டாடி இருக்கிறார். பலரும் அஜித்குமாருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து இருகின்றனர்.
அஜித் வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு நடிகர் மாதவன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவருடன் எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டு, அஜித்தை நினைத்து பெருமை கொள்வதாக மாதவன் குறிப்பிட்டிருக்கிறார்.