Aruna cardiac care-Tirunelveli: அதிநவீன தொழில்நுட்பம் சர்வதேச தரம்; நெல்லை அருணா கார்டியாக் கேர்
நெல்லை அருணா கார்டியாக் கேர் ( Aruna cardiac care - Tirunelveli) அதிநவீன தொழில்நுட்பத்தை சர்வதேச தரத்துடன் அறிமுகப்படுவதில் தமிழகத்தில் முன்னோடி மருத்துவமனைகளில் ஒன்றாக உள்ளது.
செயற்கை நுண்ணறிவு கொண்ட OCT யை தென் தமிழகத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தி தென் ஆசியாவில் அதிக 'precision' ஆஞ்சியோபிளாஸ்டியை, நெல்லையை சுற்றியுள்ள மக்களுக்கு செய்துவரும் அருணா கார்டியாக் கேர் தனது அடுத்த அதிநவீன தொழில்நுட்பமான இருதயம் மற்றும் இரத்த நாளங்களுக்கான லேசர் ஆஞ்சியோபிளாஸ்டியை அறிமுகம் செய்துள்ளது.

லேசர் ஆஞ்சியோபிளாஸ்ட்டி
ஆஞ்சியோபிளாஸ்ட்டி என்பது இதயத்திலுள்ள அடைப்புகளை நீக்கும் டிரான்ஸ் கதீட்டர் செயல்முறையாகும். லேசர் ஆஞ்சியோபிளாஸ்ட்டி என்பது, இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த நாளங்களுக்குள் உருவாகியிருக்கும் இரத்த உறை கட்டிகள் மற்றும் அடைப்புகளை ஆவியாக்கி அகற்ற பயன்படுத்துகிறது. மேலும் லேசர் ஆஞ்சியோபிளாஸ்ட்டி குறிப்பிட்ட இலக்குகளுக்கு சேதம் ஏற்படுவதை தவிர்த்து, பாதுகாப்பான சிகிச்சையை அளிப்பதில் அருணா கார்டியாக் கேர் பெருமிதம் கொள்கிறது.
இது குறித்து அருணா கார்டியாக் கேர் சேர்மன் இதயவியல் துறை தலைவர் டாக்டர்.E.அருணாசலம் கூறும்போது, இருதய இரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோபிளாஸ்ட்டி (Stenting) மூலம் சரிசெய்யப்பட்ட நோயாளிகள் சிலருக்கு 5% மீண்டும் ஸ்டென்ட் சுருக்கம்(Instent Restenosis) ஏற்படலாம். இவ்வாறு ஏற்படும் சுருக்கங்களுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சையை தவிர்த்து மிகவும் துல்லியமான முறையில் மீண்டும் ஆஞ்சியோபிளாஸ்ட்டி மூலம் சரிசெய்ய லேசர் கதிர்வீச்சு கொண்ட நவீன ஆஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சை மிகச்சிறந்த பயன்பாட்டை அளிக்கிறது.

லேசர் தொழில் நுட்பமானது உறைக்கட்டிகளை துல்லியமாக கண்டறிந்து உடைத்து துகளாக்குவதற்கு பதிலாக ஆவியாக்கி அகற்றுவதால், நோயாளிகள் விரைவாக குணமடைகின்றனர். இரத்த குழாய்களில் கொழுப்பு கட்டிகள் படிந்த கால்சியமாக உருமாற்றம் ஏற்பட்டு அடைக்கும் தருவாயில் வழக்கமான ஆஞ்சியோபிளாஸ்ட்டியை காட்டிலும் லேசர் கதீர்வீச்சின் மூலம் எளிமையாக அடைப்பை நீக்கலாம் என்றார்.
மேலும் டாக்டர்.E.அருணாசலம் கூறும்போது “இருதய இரத்த குழாய் மட்டுமின்றி பெரிபரல் ஆஞ்சியோபிளாஸ்ட்டி எனப்படும் கால்களுக்கு செல்லக்கூடிய இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பை அகற்ற செய்யப்படும் சிகிச்சையிலும் லேசர் பயன்பாடு மேன்மையாக உள்ளது.

இரத்தம் உறையும் தன்மை கொண்ட நோயாளிகளுக்கு ஏற்படும் இருதய இரத்த குழாய் அடைப்பு மற்றும் கை கால்களுக்கான இரத்தக்குழாய்களின் அடைப்பு (Critical Limb Ischemia) ஆகியவற்றை லேசர் கதிர்வீச்சு சரிசெய்ய பேருதவி செய்கிறது. இவ்வகை லேசர் ஆஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சையை தென்தமிழகத்தில் முதல் முறையாக அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறது” என்றார்.
அருணா கார்டியாக் கேர் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஸ்வர்ணலதா “இதய சுகாதாரத்தில் அதி நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி மக்கள் நலத்திற்கு அருணா கார்டியாக் கேர் அர்ப்பணித்து வருகின்றது. புதிய லேசர் தொழில்நுட்பத்தால் இதய நோயாளிகள் இனி மிகச் சிறந்த மற்றும் பாதுகாப்பான சிகிச்சையை பெறலாம்” என்று கூறினார்.

செங்கோல் ஆதீனம் 103 வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய ஸ்வாமிகள், அருணா கார்டியாக் கேரில் லேசர் ஆஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சை மையத்தை துவங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் அருணா கார்டியாக் கேர் மருத்துவமனையின் தலைவர் DR.E.அருணாசலம், நிர்வாக இயக்குனர் DR.ஸ்வர்ணலதா அருணாசலம், துணை தலைவர் A.S.தர்ஷன், DR.விஜேஷ் ஆனந்த், DR.துளசி ராம், DR.மாதவன், DR.சங்கமித்ரா, DR.கணபதி சக்திவேல், DR.ஜெயக்குமார், DR.ராமசுப்பிரமணியன், DR.பத்ரி ஸ்ரீனிவாசன், , DR.கீதா, DR.கருணாகரன் மற்றும் அனைத்து ஊழியர்கள் பங்கேற்றனர். விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.