செய்திகள் :

Ashwin: `மெல்போர்னில் சேர்ந்து பேட்டிங் ஆட வருவேன்!' - கோலியின் வாழ்த்தும், அஷ்வினின் பதிலும்!

post image
அனைத்து விதமான ர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரரான அஷ்வின் ஓய்வை அறிவித்தார்.

இந்திய அணிக்காக கடந்த 2011-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அஷ்வின் இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அஷ்வினுக்கு விராட் கோலி தனது எக்ஸ் பக்கத்தில் "14 ஆண்டுகள் ஒன்றாக விளையாடி இருக்கிறோம். பழைய நினைவுகள் எல்லாம் கண் முன்னே வந்து சென்றன.

அஷ்வினுடன் செலவிட்ட ஒவ்வொரு தருணமும் இனிமையானவை. நீங்கள் எப்போதும் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்று நினைவுகூரப்படுவீர்கள்.'' என்று வாழ்த்தைத் தெரிவித்திருந்தார். அதற்கு அஷ்வின் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

"நன்றி நண்பா! ஏற்கனவே சொன்னது போல், மெல்போர்னில் உங்களுடன் சேர்ந்து பேட் செய்ய களமிறங்குவேன்" என குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் நான்காவது டெஸ்ட், வரும் டிச.26ல் மெல்போர்னில் துவங்கும் நிலையில், அஷ்வினின் இந்தப் பதில் ரசிகர்களின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Robin Uthappa: ரூ. 23 லட்சம் PF மோசடி... உத்தப்பாவிற்குக் கைது வாரண்ட்; பின்னணி என்ன?

இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு வருங்கால வைப்பு நிதி மோசடி தொடர்பாகக் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியிருக்கிற... மேலும் பார்க்க

INDvPAK: பார்டரில் மைதானம்; இந்தியாவுக்கு ஒரு கேட்; பாகிஸ்தானுக்கு ஒரு கேட் - பாக் வீரரின் பலே ஐடியா

சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது. இந்திய அணியின் போட்டிகள் அத்தனையும் பொதுவான ஒரு நாட்டில் நடக்குமென்றும் ஐ.சி.சி அறிவித்திருக்கிறது. இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்... மேலும் பார்க்க

Ashwin: "வெற்றிக்கு பின்னால் இருந்த கண்ணீர்..."- அஷ்வின் மனைவி ப்ரீத்தியின் உருக்கமான பதிவு

ஓய்வை அறிவித்த அஷ்வின் குறித்து அவரின் மனைவி ப்ரீத்தி உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.அவர் வெளியிட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் பதிவில், " கடந்த இரண்டு நாட்களாக எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இதை ... மேலும் பார்க்க

AUSvIND: `இளம் வீரன்' - ஆஸ்திரேலியா அழைத்து வரும் 19 வயது ஓப்பனர் - யார் இந்த கான்ஸ்டஸ்?

பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிந்திருக்கும் நிலையில் தொடர் 1-1 என சமநிலையில் இருக்கிறது. இந்நிலையில், மீதமிருக்கும் 2 டெஸ்ட் போட்டிக்கான அணியை ஆஸ்திரேலியா அறிவித்திருக்கிறது. அதில... மேலும் பார்க்க

Sachin: ``உங்களைப் போலவே பந்துவீசுகிறார் ஜாகீர்!" - டெண்டுல்கர் ஷேர் செய்த சிறுமியின் வைரல் வீடியோ

இந்திய கிரிக்கெட் கண்ட தலைசிறந்த இடதுகை வேகப் பந்துவீச்சாளர் ஜாகீர் கான். எந்த அளவுக்கென்றால், கடைசியாக 2014-ல் நியூசிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியோடு தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஜாகீர் மு... மேலும் பார்க்க

Ashwin: ``துப்பாக்கிய புடிங்க வாஷி!" - வாஷிங்டன் சுந்தருக்கு அஷ்வினின் ரீ-போஸ்ட்

சர்வேதேச கிரிக்கெட்டில் ஃபார்மெட்டுகளையும் சேர்த்து மொத்தமாக 765 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் தமிழக வீரர் அஷ்வின் நேற்ற... மேலும் பார்க்க