செய்திகள் :

Ayyanar Thunai: மீண்டும் வீட்டை விட்டு வெளியேறிய நிலா, சோழனின் காதல் கதை என்னவாகும்?

post image

அய்யனார் துணை சீரியலில் நேற்றைய எபிசோடில் நிலா சோழனின் வீட்டை விட்டு வெளியேறுகிறார். சேரனின் நல்ல மனதிற்காக நிலா ரிசப்ஷனுக்கு சம்மதிக்கிறார். அதே சமயம் சேரனிடம் அனைத்து உண்மைகளையும் சொல்லிவிடுகிறார்.

மறுநாள் காலை சேரன் சோழனிடம் நிலா பற்றிய உண்மைகளை மறைத்தது ஏன் எனக் கேட்கிறார். வழக்கம் போல சோழன் சமாளிக்கிறார். தனக்கு நிலா மீது காதல் இருப்பதையும், நிலாவுடன் சேர்ந்த வாழ நினைப்பதையும் சோழன் சொல்கிறார்.

நிலா இது நிஜக் கல்யாணம் இல்லை, இங்கிருந்து சென்று விடுவேன் என்று சொல்ல, சோழன் அதற்கு நேரெதிராக ஒரு நிலாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என சொல்கிறார். இதை கேட்டு சேரன் செய்வதறியாமல் தவிக்கிறார். தம்பியின் வாழ்க்கை என்னாவது , அந்த பெண்ணின் வாழ்க்கை என்னாவது என நினைத்து வருந்துகிறார். நாளுக்கு நாள் சேரனின் கதாபாத்திரம் மெருகேறி வருகிறது.

நடேசன் காலையில் தூங்கி எழுந்ததுமே சிகரெட் பிடிக்கிறார். அவரின் செய்கைகளை பார்த்து நிலா கடுப்பாகிறார். இவர் மாதிரியான ஆள்கள் இருக்கும் இடத்தில் நாம் சேர்ந்து வாழவே முடியாது என மனதில் நினைத்துக் கொள்கிறார்.

நடேசன் சீரியலில் பெரும்பாலும் சிகரெட் பிடிப்பதும், மது அருந்துவதுமாகவே காட்டப்படுகிறது. இந்த காட்சிகளை கொஞ்சம் தவிர்க்கலாம். காரணம் சீரியல்களை சிறியவர்கள் முதல் பெரியவர்களை வரை அனைவரும் பார்க்கின்றனர்.

சேரன் நிலாவிடம் உங்க விருப்பப்படி நீங்க எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம் தான், நீங்க இங்கேயே இருந்தாலும் எனக்கு சந்தோஷம் தான் என்று சொல்கிறார். நிலா தீர்க்கமாக இங்கு இருக்கவே முடியாது என்று கூறிவிடுகிறார்.

நிலா தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு ஹாஸ்டல் பார்க்கலாம் என்று கிளம்புகிறார். சோழனும் நிலாவின் வற்புறுத்தலால் விடுதியில் சேர்க்க அழைத்துச் செல்கிறார். சோழன் பல இடங்களில் சுயநலமாக நடந்துக் கொள்கிறார். நிலாவின் மனநிலையை புரிந்து கொள்ளாமல் தன்னுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

அதே சமயம் நிலா தனக்கு உதவி செய்த குடும்பம் என்றும் பாராமல் அவர்களின் வீட்டை அறுவறுப்பாகப் பார்க்கிறார். சேரனின் நல்ல மனதை தவிர அந்த வீட்டில் அனைத்தையும் வெறுக்கிறார். எப்படியாவது இங்கிருந்து சென்றுவிட வேண்டும் என நினைக்கிறார்.

சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் நிலா நினைத்தது போன்று மகளிர் விடுதியில் சேர முடியவில்லை. அவரின் ஐடி ஃப்ரூஃப் எதுவும் அவரிடம் இல்லை. எனவே விடுதியில் அவரை சேர்க்க மறுக்கின்றனர். சோழனிடம் நிலாவின் ஐடி ப்ரூஃப் மொபைலில் இருக்கிறது. ஆனால் அந்த விஷயத்தை மறைத்து விடுகிறார். எனவே நிலாவுக்கு வேறு வழியில்லை, சோழன் வீட்டில் தான் தங்க வேண்டும்.

நிலா சோழனின் காதலை புரிந்துக் கொள்வாரா? வீட்டில் சூழலை மாற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

Vikatan Play

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MaperumSabaithanil

Siragadikka aasai : ரோகிணி அறையில் க்ருஷின் உடையை கண்டுப்பிடித்த முத்து, மீனா - அடுத்து?

சிறகடிக்க ஆசை சீரியல் த்ரில்லாக நகர்கிறது. ரோகிணி மாட்டிக் கொண்டது ஒருபுறம் ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தாலும், அடுத்தடுத்து கதையில் நடக்கும் ட்விஸ்ட் சீரியலுக்கு பாராட்டுகளை வாங்கிக் கொடுத்துள்ளது. ... மேலும் பார்க்க

CWC : விரைவில் `குக்கு வித் கோமாளி சீசன் 6' - புது கோமாளி அவதாரம் எடுக்கும் பிக் பாஸ் பிரபலம்?

`குக்கு வித் கோமாளி' இளைஞர்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி ஷோக்களுள்ஒன்று. இந்த நிகழ்ச்சிக்கெனதனியொரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. புதிய புரொடக்‌ஷன் நிறுவனம் கையிலெடுத்த `குக்கு வித் கோமாளி சீசன் 5' நி... மேலும் பார்க்க

Siragadikka aasai : மனோஜால் முத்துவுக்கு வந்த புதிய பிரச்னை - தீர்வு காண்பாரா பாட்டி?

சிறகடிக்க ஆசை சீரியலில் இயக்குநர் வைத்த அதிரடி காட்சிகள் ரசிகர்களை குஷிப்படுத்திவிட்டது. ரோகிணி மொத்தமாக மாட்டிக் கொண்டிருந்தால் ஸ்வாரஸ்யமாக இருந்திருக்காது. எனவே அவரின் மலேசியா பொய்கள் மட்டும் வெளிப்... மேலும் பார்க்க

'அம்மா, அப்பா இல்லைன்னா பிச்சை தான் எடுத்துட்டிருந்திருப்பேன்!' - `கனா காணும் காலங்கள்' ராகவேந்திரன்

`கனா காணும் காலங்கள்' தொடரின்மூலம் பரிச்சயமானவர் ராகவேந்திரன். இவர்தொடர்ந்து சில தொடர்களிலும் நடித்திருந்தார். மீடியாவைவிட்டு விலகப்போவதாக முன்பு இவர் அறிவித்திருந்தார். அந்த செய்தி வைரலாகப் பரவியது. ... மேலும் பார்க்க

ஹூசைனி என்கிற வீரனை கடுமையான நோய் தாக்கி வீழ்த்தியிருக்கு - கலங்கும் குடும்ப நண்பர் ஜெயந்தி

பிரபல கராத்தே மாஸ்டரும், நடிகருமான ஷிஹான் ஹுசைனி உடல்நலக் குறைவால் இன்று (25.03.2025) காலமாகினார். அவரின் மறைவிற்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் A.L.S தயாரிப்பு ந... மேலும் பார்க்க