செய்திகள் :

Bangkok: தீடீரென சாலையில் ஏற்பட்ட 164 அடி பள்ளம்; தாய்லாந்து அரசு சொல்லும் காரணம் என்ன?| viral video

post image

திடீரென சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை ஹாலிவுட் படங்களில் பார்த்திருப்போம். நம் நாட்டிலும் கூட திடீரென சிறு சிறு பங்கள் ஏற்படுவதுண்டு.

ஆனால், தாய்லாந்தின் துசிட் மாவட்டத்தில் உள்ள சாம்சென் சாலையில், சுமார் 900 சதுர மீட்டர் பரப்பளவில் 50 மீட்டர் ஆழம் (164 அடி) பள்ளம் ஏற்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக பாங்காக்கின் ஆளுநர் சாட்சார்ட் அளித்த தகவலின்படி, ``பாங்காக்கின் துசிட் மாவட்டத்தில் உள்ள வஜிரா மருத்துவமனைக்கு முன்னால் இந்தப் பள்ளம் ஏற்பட்டிருக்கிறது.

நோயாளிகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, 'வெளிநோயாளி சேவைகள்' தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் பள்ளம், நிலத்தடி மெட்ரோ சுரங்கப்பாதையில் உள்ள கூரை 'சேதமடைந்து விழுந்ததின் விளைவாக ஏற்பட்டது. சுரங்கப்பாதையில் சிறிதளவு மண் சரிந்தது, அது பெரிய பள்ளமாக மாறி, தொடர்ந்து இடிந்து விழுந்திருக்கிறது.

அதனால், அருகிலுள்ள கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்போ, யாருக்கும் காயமோ இல்லை.

தண்ணீர் கொண்டுச் செல்லும் குழாய் உடைந்திருக்கிறது. அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. உரிய அதிகாரிகள் அந்தப் பகுதியை ஆராய்ந்து வருகின்றனர்.

போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டிருக்கிறது. இதை கூடிய விரைவில் சரி செய்வோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

``இந்த டிரஸ் எல்லாம் போட்டு வரக்கூடாது'' - கோவை கல்லூரி மாணவியை திட்டிய பூ வியாபாரிகள்

கோவை ஆர்எஸ்புரம் அருகே பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. அங்கு 100-க்கும் மேற்பட்ட மொத்த மற்றும் சில்லறை விற்பனையில் மலர்க் கடைகள் உள்ளன. கோவை முழுவதும் இருந்து அங்கு தினசரி ஏராளமான மக்கள் பூ வாங்க செல்வ... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தான் டு டெல்லி: 94 நிமிடம் விமானத்தின் சக்கரத்தில பயணித்த 13 வயது சிறுவன் - என்ன நடந்தது?

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள குண்டுஸ் என்ற இடத்தைச் சேர்ந்த 13 சிறுவன் ஈரானுக்கு பயணம் செய்ய நினைத்து, யாருக்கும் தெரியாமல் காபூல் விமான நிலையத்துக்குச் சென்றுள்ளார். அங்கே பயணிகளுடன் கலந்து, விமானம் அ... மேலும் பார்க்க

கேரளா: ``அது என் வேலை அல்ல" - அமைச்சர் சுரேஷ் கோபி! - வைரல் வீடியோவின் பின்னணி?

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பொது நிகழ்ச்சியில் ஒரு முதியவரின் கோரிக்கையை நிராகரித்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சராக பதவிவகிப்ப... மேலும் பார்க்க

எலுமிச்சை ஏற்றும்போது முதல் தளத்திலிருந்து பறந்த கார்; பெண்மணிக்கு நேர்ந்த விபத்து - பரவும் வீடியோ!

புதிய கார் வாங்குவது இந்தியர்களுக்கு எப்போதுமே ஒரு மிகப் பெரிய சாதனைதான். அப்படித்தான் அதீத சந்தோஷத்துடன் தனது மகிந்திரா தார் காரை வாங்கியிருக்கிறார் 29 வயதான மானி பவார். சாலைக்கு கொண்டுசெல்லப்படும் ம... மேலும் பார்க்க

Red Moon: `ரத்த நிலவு' இந்தியா உள்பட பல நாடுகளில் இன்று சந்திர கிரகணம்!

சந்திர கிரகணம்:இன்று இரவு இந்தியா உள்பட உலகின் பல நாடுகளிலிருந்து முழு சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும் இந்த கிரகணத்தின் போது நிலவு செந்நிறத்தில் காட்சியளிக்கும் எனவும் இந்திய வான்... மேலும் பார்க்க

தெருநாய் விவகாரம்: ``நாய்களுக்காக மனிதர்களை வெறுப்பது நல்ல மனோபாவம் அல்ல” - எஸ்.வி. சேகர்

சமீபத்தில் தெருநாய் விவகாரம் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற விஷயத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிலைபாடு ஒன்றாகவே உள்ளது.இதற்கிடையில், “தெருநாய்களுக... மேலும் பார்க்க