BB Tamil 8 Exclusive: சௌந்தர்யாவுடன் திருமணம் எப்போது? - மனம் திறக்கும் விஷ்ணு
BB Tamil 8: 'பணப்பெட்டிய எடுக்கிற ப்ளான்லதான் ராயன் இருந்தான், ஆனா...' - மஞ்சரி சொல்வதென்ன?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 89வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலேவுக்கான டாஸ்க்குகள்தான் நடைபெற்று வருகிறது. இதனால் கடுமையான போட்டிகளும், வாக்குவாதங்களும் போட்டியாளர்களிடையே ஏற்பட்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக முத்துக்குமரன், ரயான் இடையே மோதல்கள் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தற்போதும் வெளியாகி இருக்கும் மூன்றாவது புரோமோவில், 'என்னால டாஸ்க்கில்தான் என்னைய நிரூபித்துக்கொள்ள முடியும். எந்த ஒரு வார இறுதி நாளுக்காவும் நான் வெயிட் பண்ணது இல்ல. ஆனா இந்த வார இறுதி நாளுக்காக ரொம்ப ஆர்வமா வெயிட் பண்ணிட்டு இருக்குற மாதிரி இருக்கு' என்று அருணிடம் ரயான் கூறுகிறார்.
"முத்துவைத் தோற்கடிக்கணும், ரயானுக்கு பாயின்ட்ஸ் வாங்கிக் கொடுக்கணும்கிறது என்னுடைய நோக்கம் இல்ல. ரயானைத் தோற்கடிக்க வேண்டும் அப்படின்னு நான் நினைக்கிறதுக்குக் காரணம் அவனுக்கு பாயின்ட்ஸ் நிறைய இருக்கு அதுனாலதான். அவன் என்கிட்ட உரிமை எடுத்துக்கிட்டு தேவையில்லாம வாய்விடுற மாதிரி இருக்கு" என்று ஜாக்குலின் மஞ்சரியிடம் புலம்ப மஞ்சரி 'அவன் டிக்கெட் டு ஃபினாலே டிக்கெட் வாங்கிட்டு பணப்பொட்டியை எடுத்திட்டு போயிருவேன்னு சொன்னான்' என்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...