செய்திகள் :

BRS: "மிகவும் வேதனையளிக்கிறது" - சஸ்பெண்ட் ஆன ஒரே நாளில் கட்சியிலிருந்து விலகிய KCR மகள் கவிதா

post image

தெலங்கானாவில் சந்திரசேகர ராவின் கடந்த ஆட்சியில் காலேஷ்வரம் அணை கட்டப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதாக தற்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டி வரும் நிலையில், இதில் சிபிஐ விசாரணை நடத்த முதல்வர் ரேவந்த் ரெட்டி தீர்மானித்திருக்கிறார்.

இவ்வாறிருக்க, கடந்த திங்களன்று ஊடகங்கள் முன்னிலையில் தெலங்கானா முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவின் (KCR) மகளும், சட்டமன்ற மேலவை உறுப்பினருமான கவிதா, "காலேஷ்வரம் அணை கட்டும்போது, கட்சியின் மூத்த தலைவர் ஹரீஷ் ராவ் மாநில நீர்வளத் துறை அமைச்சராக இருந்தார்.

தற்போதைய விவகாரத்தில் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி-யுமான சந்தோஷும் சம்பந்தப்பட்டிருக்கிறார்.

கவிதா
கவிதா

இவர்களால்தான் என்னுடைய தந்தைக்கு அவப்பெயர் ஏற்பட்டு, தற்போது சிபிஐ விசாரணை வரை சென்றுள்ளது.

இப்போதெல்லாம் என் தந்தையைச் சுற்றிலும் என்னைக் குறை கூறும் கும்பல் மட்டுமே உள்ளது" என்று வெளிப்படையாகப் பேசினார்.

இதன் காரணமாக, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகக் கட்சியிலிருந்து கவிதா நேற்று (செப்டம்பர் 2) இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் சமூக மற்றும் கலாசாரக் குழுவான தெலுங்கானா ஜக்ருதி அமைப்பின் (கவிதாவால் தொடங்கப்பட்டது) அலுவலகத்தில் இன்று பிற்பகல் செய்தியாளர்களைச் சந்தித்த கவிதா, "கட்சியிலிருந்து திடீரென நான் இடைநீக்கம் செய்யப்பட்டது மிகவும் வேதனையளிக்கிறது.

சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நான் ராஜினாமா செய்கிறேன்.

எனது இந்த ராஜினாமாவை சபாநாயகர் மற்றும் சந்திரசேகர் ராவ் ஆகியோருக்கு அனுப்புகிறேன்.

கவிதா
கவிதா

அதேசமயம், எந்தக் கட்சியுடனும் நான் செல்லவில்லை. தெலுங்கானா ஜக்ருதி உறுப்பினர்களுடன் விவாதித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வேன்.

எனது தந்தையும், எனது சகோதரரும்தான் (கே.டி. ராமாராவ்) என் குடும்பம். நாங்கள் ரத்தத்தால் பிணைக்கப்பட்டவர்கள்.

கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டாலோ அல்லது பதவிகளை இழந்தாலோ இந்தப் பிணைப்பு முறிந்துவிடக்கூடாது.

சிலர் தங்கள் தனிப்பட்ட அரசியல் வளர்ச்சிக்காக எங்கள் குடும்பம் சிதைந்து போக வேண்டும் என்று விரும்புகிறார்கள். என் தந்தையைச் சுற்றியிருப்பவர்களை ஆராயுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

ஹரீஷ் ராவும், ரேவந்த் ரெட்டியும் விமானத்தில் ஒன்றாகப் பயணம் செய்யும் போது எங்கள் குடும்பத்தை அழிக்கத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. ரேவந்த் ரெட்டி இதற்குப் பதிலளிக்க வேண்டும்.

அவர் எனது குடும்ப உறுப்பினர்கள் கே.சி.ஆர் மற்றும் கே.டி.ஆர் மீது மட்டுமே வழக்குப் பதிவு செய்தார். ஹரிஷ் ராவ் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை.

தந்தை சந்திரசேகர ராவுடன் மகள் கவிதா
தந்தை சந்திரசேகர ராவுடன் மகள் கவிதா

ஆனால், காலேஸ்வரம் திட்டம் தொடங்கியபோது நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ​​ஹரிஷ் ராவ்.

ஹரிஷ் ராவ் மற்றும் அவரது உறவினர் சந்தோஷ் ராவ் எங்கள் குடும்பத்தையும் கட்சியையும் அழிக்கத் திட்டமிட்டிருக்கின்றனர்" என்று கூறினார்.

மேலும், தொடர்ந்து பேசிய கவிதா, "நீண்ட நாள்களுக்கு முன்பு கட்சி அலுவலகத்துக்குச் சென்று, இந்தச் சதித்திட்டங்கள் குறித்தும் எனக்கெதிரான எதிரான பொய் பிரசாரம் பற்றியும் கே.டி.ஆரிடம் புகார் அளித்தேன்.

இது குறித்து நீங்கள் ஏதாவது நடவடிக்கை எடுத்தீர்களா அண்ணா? இது தொடர்பாக ஒரு வார்த்தையாவது பேசினீர்களா?" என்று கேள்வியும் எழுப்பினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

சொத்துக் குவிப்பு வழக்கு; அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரன்ட்; செப்., 15-க்குள் அமல்படுத்த உத்தரவு!

திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன், 2006 - 2011 ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, 2007 - 2009 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 1.40 கோடி சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரின் ம... மேலும் பார்க்க

பிரதமர் தாய் அவமதிப்பு விவகாரம்: "வெளிநாட்டில் சிரிக்கிறார், இங்கு அழுகிறார்" - தேஜஸ்வி விமர்சனம்

ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், பிரதமர் மோடி அவரது தாய் காங்கிரஸ், ஆர்.ஜே.டி பேரணியில் அவமதிக்கப்படதாகப் பேசியது ஒரு நாடகம் எனப் பேசியுள்ளார்.மோடியை விமர்சித்துப் பேசிய தேஜஸ்வி, "நம் எல்லோரு... மேலும் பார்க்க

NIRF அறிக்கை: "நாட்டின் தலைசிறந்த 17 கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளது" - ஸ்டாலின் பெருமிதம்!

தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) வெளியிட்டுள்ள 2025ம் ஆண்டுக்கான தரவரிசையில் தமிழக கல்வி நிறுவனங்கள் முதலிடம் பிடித்திருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வ... மேலும் பார்க்க

அதிமுக-வின் சூப்பர் சீனியர்; எம்.ஜி.ஆர் - ஜெ காலத்து ரத்தத்தின் ரத்தம் - யார் இந்த செங்கோட்டையன்?!

முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன்அதிமுக-வுக்குள் மீண்டும் ஒரு வெடியை கொளுத்திப் போட்டிருக்கிறார். நாளை காலை 9 மணிக்கு மனம் விட்டுப் பேசப் போகிறேன் என தேதி நேரமெல்லாம் குறித்திருக்கிறார். எடப்பாடிக்கும்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "வெளிய போங்க; அதான் உத்தரவு" - பத்திரிகையாளர்களை மிரட்டிய போலீஸ்

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி நள்ளிரவில் கைதான தூய்மைப் பணியாளர்கள், சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் இன்று கூடியிருந்தனர். அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாகக் கைது செய்தனர். அப்போது... மேலும் பார்க்க