Chhattisgarh : சுதந்திரத்துக்குப் பின் முதன்முறையாக மின்சாரம் பெற்ற கிராமம் - அரசு சொல்வது என்ன?
சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகளுக்குப் பிறகு சத்தீஸ்கர் மாநிலத்தின் கிராமத்துக்கு மின்சாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
அமைச்சர் அமித் ஷாவின் சூளுரை
``பிரதமர் மோடி அரசு நக்சலைட்டுகளுக்கு எதிராக இரக்கமற்ற அணுகுமுறைகளைக் கடைபிடித்து வருகிறது. சரணடைதல் தொடங்கி என்கவுண்டர் வரை தொடர்ந்து மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத் தன்மையை பின்பற்றி வருகிறோம். மார்ச் 31, 2026-க்குள் நாடு நக்சல் இல்லாததாக நாடாக இருக்கும்" என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் சத்தீஸ்கரில் இந்த ஆண்டு இதுவரை 113 நக்சலைட்டுகள் தனித்தனி மோதல்களில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பீஜாப்பூர் உட்பட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தார் பிரிவில் மட்டும் 97 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டிலிருந்து பல்வேறு கிராமங்கள் மீட்கப்பட்டு, அந்தப் பகுதியில் அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்கிறது அரசு தரப்பு.
மீட்கப்பட்ட கிராமங்கள்
அதன் ஒருபகுதியாக மாவோயிஸ்ட்களின் ஆளுகைக்குக் கீழ் இருந்த பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமமான டைம்னாரில் முதல்முறையாக மின்சாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக சத்தீஸ்கர் அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``பைராம்கர் மேம்பாட்டுத் தொகுதியில் உள்ள பெச்சபால் கிராம பஞ்சாயத்தின் விரிவாக்க கிராமத்தில் உள்ள 53 வீடுகளும், முதல்வரின் மஞ்ச்ரா-டோலா மின்மயமாக்கல் திட்டத்தின் கீழ் மின்சாரம் வழங்கப்பட்டிருக்கிறது. 77 ஆண்டுகால சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக அந்த கிராமம் மின்மயமாக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டிருக்கிறது.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play