செய்திகள் :

Coolie: ``நடிச்சது ரஜினி சார், அந்த குரல் AI'' - சஸ்பென்ஸ் உடைத்த லோகேஷ் கனகராஜ்

post image

கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற AI தொழில்நுட்ப நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார்.

அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்:
“சினிமா பார்த்துதான் வாழ்க்கையை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது, என்னைப் பொறுத்தவரை சரியானது இல்லை.

லோகேஷ் கனகராஜ்

ஒரு சினிமா நம்மீது செல்வாக்கு செலுத்தினால், வளர்ந்த விதமே தவறாகிவிடும். சினிமா ஒரு பொழுதுபோக்கு, ஒரு படம் நம்மை சிந்திக்க வைக்கலாம், அவ்வளவுதான்." என்றார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த லோகேஷ் கனகராஜ்,
“சினிமா துறையில் ஏஐ தொழில்நுட்பத்தின் உதவி இருக்கும். ஆனால் அது ஆதிக்கம் செலுத்துமளவிற்கு இருக்காது. அதைச் சரியாக பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம். அதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது நம் கையில்தான் உள்ளது,” என்றார்.

'கூலி' ரஜினி

கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்தின் பிளாஷ்பேக் காட்சிகள் இருக்கும். அதில் நடித்தது ரஜினி சார் தான். அதனை டி-ஏஜிங் செய்து இருக்கிறோம். ஆனால் அந்தக் குரல் ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டது.

“எதிர்காலத்தில் நான் அனிருத் இல்லாமல் படமே பண்ணவே மாட்டேன். நான் அனிருத்தை பயன்படுத்தி வருகிறேன். அதனால் எனக்கு ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்த தேவையில்லை” என்று நகைச்சுவையாக கூறியவரிடம்,

லோகேஷ் கனகராஜ் - அனிருத்
லோகேஷ் கனகராஜ் - அனிருத்

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் படத்தில் நடிப்பது பற்றிய கேள்விக்கு, “நானும் அனிருத் இணைந்து நடிப்பது குறித்து அருண் மாதேஸ்வரன் தான் கூற வேண்டும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

``தனுஷ் நல்ல நண்பர்'' - டேட்டிங் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணால் தாக்கூர்

பாலிவுட் நடிகை மிருணால் தாக்கூர் நடிகர் தனுஷுடன் டேட்டிங்கில் இருப்பதாக சமீப காலமாக தகவல்கள் பரவிக்கொண்டிருந்தது. அடிக்கடி தனுஷ் மும்பை வந்து மிருணால் தாக்குருடன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாகவும், இர... மேலும் பார்க்க

``3 மாதங்களில் புதிய சினிமா கொள்கை நடைமுறைக்கு வரும்'' - கேரள அமைச்சர் சொல்வது என்ன?

கேரள மாநிலத்தில் சினிமா படப்பிடிப்பு தளங்களில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. ஹேமா கமிட்டி விசாரணை அறிக்கையின் அடிப்படையில், சின... மேலும் பார்க்க

``அதுவும் ஒரு அனுபவம்'' - லலித் மோடியுடன் காதல் உறவு குறித்து மனம் திறந்த நடிகை சுஷ்மிதா சென்

பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் எத்தனையோ பேருடன் கிசுகிசுக்கப்பட்டார். ஒரு சில உறவுகளை மட்டும் சுஷ்மிதா சென் வெளிப்படையாக ஒப்புக்கொண்டதுண்டு. அந்த வகையில், ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடியுடன் சுஷ்மி... மேலும் பார்க்க