Vikatan Digital Awards: "‘பொல்லதவன்’ படத்தின்போதே சிம்புவுடன் பேசிக்கிட்டிருந்தே...
CPI: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2005ஆம் ஆண்டு முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக முத்தரசன் பொறுப்பு வகித்து வந்தார். அதன் பிறகு நடந்த மூன்று மாநில பொதுக்கூட்டங்களிலும் முத்தரசன் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.
கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் அந்த பொறுப்பில் முத்தரசன் இருந்தநிலையில், அவரின் பதவிக்காலம் கடந்த மாதத்துடன் நிறைவு பெற்றிருக்கிறது.
இதனை அடுத்து இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கூட்டம் சென்னை சூளைமேட்டில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது சிபிஐ (Communist Party of India) மாநில துணை செயலாளராகவும் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!