வக்ஃப் என்பது அத்தியாவசிய மத நடைமுறை அல்ல: மத்திய அரசு வாதம்
CSK: 'பதிரனா எங்களோட எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யல!' - ப்ளெம்மிங் அதிருப்தி
'சென்னை தோல்வி!'
ராஜஸ்தான் ராயல்ஸூக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி தோற்றிருக்கிறது. இந்தத் தோல்விக்குப் பிறகு சென்னை அணியின் பயிற்சியாளர் ப்ளெம்மிங் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருக்கிறார்.
'பதிரனாவிடம் எதிர்பார்த்தோம்!'
ப்ளெம்மிங் பேசியதாவது, ''அன்ஷூல் கம்போஜ் சிறப்பாக பந்து வீசுகிறார். 138-139 கி.மீ வேகத்தில் வீசுகிறார். அவர் தேர்வு செய்யும் சரியான லெந்த்கள்தான் அவரின் பெரிய பலம். காற்றில் பந்தை அலைய விட்டு (wobble) வீசுகிறார். அவரிடம் நல்ல திறன் இருக்கிறது. அவரின் செயல்பாட்டில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். பதிரனா மீது நிறைய எதிர்பார்ப்பு வைத்திருந்தோம்.
அதனால்தான் அவரை ரீட்டெய்ன் செய்தோம். ஆனால், அவர் சிறப்பாகச் செயல்படவில்லை. தென்னாப்பிரிக்காவின் SAT20 யிலேயே அவரை கவனமாக பார்த்தோம். அங்கேயே அவர் அவுட் ஆப் பார்மில்தான் இருந்தார். அதிலிருந்து மீண்டு வர அவர் நிறைய முயற்சிக்கிறார். ஆனாலும் நாங்கள் எதிர்பார்ப்பதைப் போலவோ அல்லது அவர் செய்ய விரும்புவதைப் போலவோ அவரால் செய்ய முடியவில்லை.

அவர் பார்முக்கு திரும்ப தன்னம்பிக்கையை மீட்டெடுக்க கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது என நினைக்கிறேன். பேட்டிங் ஆர்டரை சரி செய்வதில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். டாப் ஆர்டர் சரியாக ஆடாதபோது பேட்டிங் ஆர்டர்களை மாற்ற வேண்டியிருக்கிறது. அடுத்த சீசனுக்கென நாங்கள் சில நல்ல தீர்க்கமான ஐடியாக்களை வைத்திருக்கிறோம்.' என்றார்.