செய்திகள் :

DMK : 'ஓசி பஸ்ஸூ கொடுத்துட்டோம்னு ஏரோப்ளேன் கேட்காதீங்க..' - தேனி திமுக எம்.எல்.ஏ சர்ச்சைப் பேச்சு!

post image

தேனி ஆண்டிப்பட்டியை சேர்ந்த திமுக எம்.எல்.ஏ மகாராஜன் மக்களை பார்த்து, 'ஓசி பஸ்லதான போறீங்க?' என பேசியிருக்கும் வீடியோ சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

மகாராஜன் - திமுக
மகாராஜன் - திமுக

'எம்.எல்.ஏவின் சர்ச்சைப் பேச்சு!'

ஆண்டிப்பட்டியின் மண்ணூத்து கிராமத்தில் சமூகநல கூடத்தை திறந்து வைத்த மகாராஜன், 'இங்க இருக்குற மர மட்டையெல்லாம் வாடிப் போய் இருந்துச்சுல்ல. இந்த மகராசன் எம்.எல்.ஏ வாக வந்த பிறகுதான் மழை பெய்து ஆற்றில் தண்ணீர் ஓடுது. நாங்க ஆட்சிக்கு வந்தா 4 மணி வரைக்கும் கஷ்டப்படாம வேலை செய்யுங்க, அப்புறம் ஓசி பஸ்ல ஏறி தேனி போங்க, ஆண்டிப்பட்டி போங்கன்னு சொன்னோம், சொன்னதை செஞ்சிருக்கோம்.

இங்கேயும் ரோடு போட போறோம். பஸ்ஸூ விடப்போறோம். நீங்களும் ஓசியாத்தான் போகப்போறீங்க. பஸ்ஸூ கொடுத்துட்டோம்னு அடுத்து ஏரோப்ளேன் கேட்காதீங்க.' எனப் பேசியிருந்தார்.

மகாராஜன்
மகாராஜன்

'அண்ணாமலை கண்டனம்!'

இந்நிலையில், தமிழக பா.ஜ.கவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். அவர் பேசியிருப்பதாவது, 'பேருந்தில் டிக்கெட் கட்டணமின்றி பயணம் செய்யும் நமது தாய்மார்களை, ஓசி என்று ஏளனம் செய்த திமுக அமைச்சர் ஒருவர், இன்று அமைச்சர் பதவியிழந்து, வீட்டில் உட்கார்ந்திருக்கிறார். தற்போது, ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு மகாராஜன், மீண்டும் நமது தாய்மார்களை, ஓசி என்று அவமானப்படுத்தியிருக்கிறார்.

மக்கள் நலத் திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்படுவது, மக்களின் வரிப்பணத்தில்தானே, கோபாலபுரத்தில் உங்கள் தலைவர் சேர்த்து வைத்த பணத்திலா செயல்படுத்துகிறீர்கள்? எங்கிருந்து வருகிறது இந்த ஆணவமும் திமிரும்?

annamalai
annamalai

வரும் 2026 தேர்தலில், ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரையும் தோற்கடித்து, வீட்டில் உட்கார வைத்து, உங்கள் ஆணவத்துக்கு பொதுமக்கள் பதிலடி கொடுப்பார்கள்.' எனக் கூறியிருக்கிறார்.

`மாநில அரசு செய்த கொலை!' - DMK அரசை வெளுத்து வாங்கிய High Court | STALIN | Imperfect Show 1.7.2025

* அஜித்தை கண்மூடித்தனமாகத் தாக்கும் பகீர் வீடியோ! காவல்துறையினரின் அத்துமீறல் அம்பலம்!* திருப்புவனம் லாக்கப் மரணம்: "கால் இடறி கீழே விழுந்ததில், வலிப்பு ஏற்பட்டு மரணம்" - FIR சொல்வது என்ன? * மாநில அரச... மேலும் பார்க்க

"SORRY தான் பதிலா? அலட்சியத்தின் உச்சம்; கொஞ்சம்கூட குற்ற உணர்ச்சியே இல்லை" - ஸ்டாலினை சாடும் இபிஎஸ்

திருப்புவனம் பகுதியில் நகை காணாமல் போன புகாரில், தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் அஜித்குமாரை அடித்துத் துன்புறுத்தியதில் அவர் உயிரிழந்த சம்பவம் கடந்த மூன்று நாள்களாக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கி... மேலும் பார்க்க

அஜித்குமார் மரணம்: "போலீஸ் தாக்குதல்தான் காரணம் என அறிந்து வேதனையடைந்தேன்; CBI விசாரணை" - ஸ்டாலின்

திருப்புவனம் பகுதியில் நகை காணாமல் போன புகாரில், தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் அஜித்குமாரை அடித்துத் துன்புறுத்தியதில் அவர் உயிரிழந்த சம்பவம் கடந்த மூன்று நாள்களாக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கி... மேலும் பார்க்க

திருப்புவனம்: "ரொம்ப சாரிமா... நடக்கக் கூடாதது நடந்துவிட்டது" - அஜித்குமார் தாய்க்கு ஸ்டாலின் ஆறுதல்

திருபுவனத்தில் நகை காணாமல் போன புகாரில் அஜித்குமார் என்ற இளைஞரை தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் இரண்டு நாள்களாக அடித்துத் துன்புறுத்தியதில் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.காவல்துறையின் இந்த எதேச... மேலும் பார்க்க

'பாஜக கூட்டணி இல்லை என்றனர்; இப்போது மிக்சர் சாப்பிடுகின்றனர்' - அதிமுக குறித்து செந்தில் பாலாஜி

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை கொடிசியா பகுதியில் உள்ள தன் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நம் முதலமைச்சர் ஆளுமை மிக்க முதலமைச்சராக இருக்கிறார். கோவை ம... மேலும் பார்க்க