செய்திகள் :

Doctor Vikatan: கொளுத்தும் கோடைக்காலத்திலும் ஜலதோஷம் பிடிப்பது ஏன்?

post image

Doctor Vikatan: பொதுவாக குளிர் மற்றும் மழைக்காலங்களில்தானே பலருக்கும் ஜலதோஷம் பிடிக்கும்.... எனக்கோ, எல்லா சீசன்களிலும் ஜலதோஷம் இருக்கிறது. கொளுத்தும் கோடைக்காலத்தில்கூட ஜலதோஷம் பிடித்துக்கொள்கிறது. இதனால் என்னால் ஐஸ்கிரீம், கூல்டிரிங்க் போன்ற எதையும் சாப்பிட முடிவதில்லை. இதற்கு என்ன காரணம்.... என்ன தீர்வு?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர் சஃபி

மருத்துவர் சஃபி

ஜலதோஷம் என நீங்கள் குறிப்பிடுவது சாதாரண அறிகுறியா, சளி, இருமலுடன் கூடிய அறிகுறியா அல்லது தும்மல் என்பதை வைத்துச் சொல்கிறீர்களா என்று தெளிவாகத் தெரியவில்லை.

ஜலதோஷம் என்பது எந்த சீசனில் வேண்டுமானாலும் பிடிக்கலாம். குளிர்காலம், மழைக்காலம், வெயில்காலம் என எல்லாக் காலங்களிலும் ஜலதோஷம் பிடிப்பதற்கான முக்கிய காரணம், வைரஸ் தொற்றுதான். இது 'ரெஸ்பிரேட்டரி சின்சிஷியல் வைரஸ்' (Respiratory syncytial virus ) அல்லது 'அடினோ வைரஸ்' ( Adenovirus) என எந்த வைரஸாகவும் இருக்கலாம். சிலர் எளிதில் இதுபோன்ற தொற்றுக்குள்ளாகிறவர்களாக  இருப்பார்கள். அதாவது அவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பதால் எந்த சீசனிலும் தொற்றுக்குள்ளாகிவிடுவார்கள்.

சூழல் காரணிகளாலும் ஜலதோஷம் வரலாம்.

இதுபோன்ற தொற்றுகள் வராமலிருக்கத்தான் வருடந்தோறும் ஃப்ளூ தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அது சளி, காய்ச்சல் பாதிப்பு தாக்காமல் பாதுகாப்பு கொடுக்கும். கடிதத்தில் உங்கள் வயது குறிப்பிடப்படவில்லை. ஒருவேளை, சிறு வயதுக் குழந்தைக்கு இதுபோன்ற பாதிப்பு வருகிறது என்றால், குழந்தைக்கு அலர்ஜி தொடர்பான பாதிப்பு ஏதேனும் இருக்கிறதா, ஆஸ்துமா பாதிப்புக்கான அறிகுறிகள் தென்படுகின்றனவா என்று பார்க்க வேண்டும்.

நம்மைச் சுற்றியுள்ள சூழல் காரணிகளாலும் இப்படி ஏற்படலாம்.; உதாரணத்துக்கு, வீட்டுக்குள் வளர்க்கும் செல்லப்பிராணிகள், சாம்பிராணிப் புகை, தொழிற்சாலை புகை.... இப்படிப் பல காரணிகள் இந்த பாதிப்பைத் தூண்டலாம். எனவே, நீங்கள் உங்கள் குடும்பநல மருத்துவரை அணுகி, உங்கள் அறிகுறிகளைச் சொல்லி, ஜலதோஷம் பிடிப்பதற்கான காரணங்களைத் தெரிந்துகொண்டு, சிகிச்சை பெறலாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

ஒட்டன்சத்திரம்: பச்சை மிளகாய் விலை வீழ்ச்சி... காரணம் என்ன?

தமிழகத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்களில் முக்கியமானது திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட். இந்த மார்க்கெட்டுக்கு வரும் காய்கறி வரத்தை பொருத்தே சுற்றுவட்டார பகுதிகளில் காய்கறி விலை ந... மேலும் பார்க்க

Modi: மோடிக்காக ரிஸ்க் எடுத்த ட்ரம்ப்; சீனா உடன் போட்டி - உலக முன்னேற்றத்துக்கு மோடி சொன்ன வழி!

பிரதமர் மோடியின் சமீபத்திய பாட்காஸ்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான உறவு, உலக அரங்கில் இந்தியாவின் இடம் மற்றும் சீனா உடனான உறவுகள் பற்றி பேசியுள்ளார். 'எந்த நாடும் தனியாக இருக்க முடியாது'உலக விவகாரங... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஹுசைனியை பாதித்த `ஏபிளாஸ்டிக் அனீமியா': ரத்தப் புற்றுநோயாக மாறியது எப்படி?

Doctor Vikatan: பிரபல கராத்தே வீரர் ஹுசைனிக்குஏபிளாஸ்டிக் அனீமியா என்ற பிரச்னைபாதித்திருத்திருப்பதாகவும், அது பிளட் கேன்சர் எனப்படுகிற ரத்தப் புற்றுநோயாகமாறியதால், அவர் வாழ்நாள்களை எண்ணிக்கொண்டிருப்பத... மேலும் பார்க்க

Modi: ``வறுமை, பாகிஸ்தான், விரதம்...'' - பர்சனல் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, செயற்கை நுண்ணறிவு ஆய்வாளரும் பாட்காஸ்டருமான லெக்ஸ் ஃப்ரித்மேன் உடன் கிட்டத்தட்ட 3 மணிநேர உரையாடலை மேற்கொண்டார். கடந்த ஜனவரி மாதம் செதோரா நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் ... மேலும் பார்க்க

Health: அடிக்கடி தும்மல், அடுக்குத்தும்மல், அதிர வைக்கும் தும்மல்... தீர்வு இருக்கிறதா?

தும்மல் என்பது இயல்பான ஒன்று. ஆனால், சிலர் பக்கத்தில் இருப்பவர்கள் பதறும் அளவுக்கும், வீடே அதிரும் அளவுக்கும் தும்முவார்கள். இது காலம், காலமாகவே இருந்து வரும் பிரச்னைதான். வயது முதிர்ந்த‌வர்களுக்கே அத... மேலும் பார்க்க

America: 3.6 மில்லியன் கிரெடிட் கார்டுகள் செயலிழப்பு... பின்னணியில் எலான் மஸ்க்! - காரணம் என்ன?!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றத்தில் இருந்து தினமும் ஒவ்வொரு அறிவிப்புகள், சில சில அதிர்ச்சிகள் வந்துக்கொண்டே இருக்கின்றன. அந்த வகையில், தற்போது அமெரிக்க அரசு அலுவலகங்களின் கிட்டதட்ட 2 லட்சம் கிரெ... மேலும் பார்க்க