செய்திகள் :

Doctor Vikatan: தவிர்க்க முடியாத பகல் தூக்கம், இரவில் தூக்கமின்மை; பேலன்ஸ் செய்வது எப்படி?

post image

Doctor Vikatan: எனக்கு 55 வயதாகிறது. தினமும் வீட்டு வேலைகளை முடித்த பிறகு, மதியம் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை தூங்குகிறேன். இந்தத் தூக்கத்தை என்னால் தவிர்க்க முடியவில்லை. ஆனால், இது என் இரவுத் தூக்கத்தைக் கெடுக்கிறது. இரவில் என்னால் சரியாகத் தூங்க முடிவதில்லை, மிகவும் தாமதமாகவே படுக்கைக்குச் செல்கிறேன். இதை நான் எப்படிச் சமநிலைப்படுத்துவது?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்.

இரவில் தூக்கமின்மை

பகலில் சிறிது நேரம் தூங்குவது என்பது அவ்வளவு மோசமான விஷயமெல்லாம் இல்லை. ஆனால், அந்தத் தூக்கமானது அதிகபட்சமாக 20 நிமிடங்களுக்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

20 நிமிடங்களைத் தாண்டாத பகல் தூக்கம் உண்மையில், நம் மூளையைப் புத்துணர்வடையச் செய்யும். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிக களைப்பாக உணர்பவர்களுக்கு, அதிலிருந்து மீண்டு, உடலும் மனமும் சகஜ நிலையை அடைய உதவும். 20 நிமிடங்களைத் தாண்டிய தூக்கம் என்பது சரியான விஷயமல்ல. அப்படி நீளும் தூக்கம், நிச்சயம் இரவுத் தூக்கத்தை பாதிக்கும்.

மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்

பகலில் தூங்கும் வழக்கம் உள்ளோர், 2 மணிக்குள் தூங்கி எழும்படி பார்த்துக்கொண்டால், இரவுத் தூக்கம் பாதிக்கப்படாது. அதுவே 3- 4 மணிக்கு மேல் தூங்கினாலோ, மணிக்கணக்கில் தூங்கினாலோ, இரவுத் தூக்கம் நிச்சயம் பாதிக்கப்படும். அதன் விளைவாக அடுத்தநாள் வேலைகளில் தொய்வு ஏற்படும். தூக்க சுழற்சி பாதிக்கப்படும். அது தொடர்கதையாக மாறும்.

சிலர், வார நாள்களில் பரபரப்பாக ஓடிக்கொண்டே இருப்பதால், வார இறுதி நாள்களை வெளியே செல்வது, படம் பார்ப்பது போன்றவற்றுக்காகச் செலவழிப்பார்கள். அதனால் வழக்கமான தூக்க நேரம் தள்ளிப்போகும். அது ஆரோக்கியமான விஷயமல்ல. வார நாள்களோ, விடுமுறை நாள்களோ, எல்லா நாள்களிலும் ஒரே நேரத்தில் தூங்குவதைப் பின்பற்றுவதுதான் ஆரோக்கியமானது.

ஒரே நேரத்தில் தூங்குவதைப் பின்பற்ற வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: கிட்னி ஸ்டோன்ஸ்: அறுவை சிகிச்சை தவிர்த்து, சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டா?

Doctor Vikatan:கிட்னி ஸ்டோன்ஸை சித்த மருந்துகளால் கரைக்க முடியுமா, எந்த அளவுவரை மருந்துகளால் கரைக்கலாம். சித்த மருந்துகள் எடுத்துக்கொண்டால் அறுவை சிகிச்சையைத் தவிர்க்க முடியுமா?பதில் சொல்கிறார், திருப... மேலும் பார்க்க

வைட்டமின் சி முதல் இதய ஆரோக்கியம் வரை முருங்கைக்காய் தரும் நற்பலன்கள்!

முருங்கைக்கீரை சூப்பர் ஃபுட் எனக் கொண்டாடுகிறோம். முருங்கைக்காயும் நமக்கு ஆரோக்கியம் தருவதில் சிறப்பானதுதான் என்கிற உணவியல் ஆராய்ச்சியாளர் சிவப்ரியா மாணிக்கவேல், அதன் பலன்களையும் சில முருங்கைக்காய் ரெ... மேலும் பார்க்க

Doctor Vikatan: கண்களில் Cataract; அறுவை சிகிச்சையைத் தவிர்த்து வேறு தீர்வுகள் உண்டா?

Doctor Vikatan: கேட்டராக்ட் பிரச்னையின் அறிகுறிகள் எப்படியிருக்கும், கேட்டராக்ட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே அறுவை சிகிச்சை செய்ய முடியாதா, எத்தனை வருடங்களுக்குள் செய்ய வேண்டும். அறுவை சிகிச்சை... மேலும் பார்க்க

Thyroid Reversal: தைராய்டு தானாகவே ரிவர்ஸ் ஆகுமா? உண்மையை உடைக்கும் மருத்துவர்கள்! | InDepth

தைராய்டு ரிவர்சல் அடிக்கடி சோஷியல் மீடியாக்களில் கண்களில்படுகிற விளம்பரம் இது. 'உங்க தைராய்டு ரிவர்சல் ஆகணுமா? இத சாப்பிடுங்க; இத சாப்பிடாதீங்க; இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க' என்று ரீல்ஸ் வரும். கூடவே, ... மேலும் பார்க்க

``தலைமைப் பண்பு இல்லாதவருக்கு தோல்வி நிச்சயம்'' - எடப்பாடி பழனிசாமி மீது ஓபிஎஸ் குற்றச்சாட்டு

தலைமைப் பண்பு இல்லாதவருக்கு தோல்வி நிச்சயம் என்று ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட... மேலும் பார்க்க

``இறந்தவர்களுடன் தேநீர் அருந்த வாய்ப்பு வழங்கிய தேர்தல் ஆணையத்துக்கு நன்றி'' - ராகுல் காந்தி

பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கு முன்னேற்பாடாக, தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொண்டது. அந்த பணியின் போது, சுமார் 65 லட்சம்... மேலும் பார்க்க