செய்திகள் :

ENG vs IND: "அவர் மீது நம்பிக்கை இருக்கிறது" - ஹின்ட் கொடுத்த கேப்டன் கில்; அறிமுகமாகும் CSK வீரர்?

post image

இங்கிலாந்துக்கெதிரான லார்ட்ஸ் டெஸ்டில் தோற்றதால் 2 - 1 எனப் பின்தங்கியிருக்கும் இந்திய அணி தொடரை 2 - 2 என சமன் படுத்த நாளை (ஜூலை 23) நான்காவது டெஸ்டில் களமிறங்கவிருக்கிறது.

கடந்த போட்டியில் பிளெயிங் லெவனில் ஆடிய நிதிஷ் குமார் ரெட்டி காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியதால் அவருக்குப் பதில் அணியில் யார் இடம் பிடிப்பார், பும்ரா களமிறங்குவாரா, மூன்று டெஸ்ட் போட்டியில் ஆடியும் ஒரு அரைசதம் கூட அடிக்காத கருண் நாயருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படுமா அல்லது முதல் டெஸ்ட் போட்டியோடு பென்ச்சில் உட்காரவைக்கப்பட்ட சாய் சுதர்சனுக்கு வாய்ப்பளிக்கப்படுமா என பிளெயிங் மீதான எதிர்பார்ப்புகள் நீடிக்கின்றன.

சுப்மன் கில்
சுப்மன் கில்

இந்த நிலையில், சி.எஸ்.கே வீரர் நாளைய போட்டியில் அறிமுகமாகலாம் என்று கேப்டன் சுப்மன் கில் ஹின்ட் கொடுத்திருக்கிறார்.

போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசிய கில், "நாளைய போட்டியில் ஆகாஷ் தீப்பும் இல்லை, அர்ஷதீப்பும் இல்லை.

இருப்பினும் 20 விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய பவுலர்கள் எங்களிடம் இருக்கின்றனர். நான் தயாராக இருக்கிறேன்.

Anshul Kamboj - அன்ஷுல் கம்போஜ்
Anshul Kamboj - அன்ஷுல் கம்போஜ்

அன்ஷுல் காம்போஜ் அறிமுகம் வாய்ப்புக்கு அருகில் இருக்கிறார். பிரசித் கிருஷ்ணாவா அல்லது அன்ஷுல் காம்போஜா என்பது நாளை தெரியும்.

அன்ஷுல் காம்போஜின் திறமையை நாங்கள் பார்த்திருக்கிறோம். அவரால் போட்டிகளை வென்று கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது." என்று கூறினார்.

கடந்த ரஞ்சி சீசனில் ஹரியானா அணியில் விளையாடிய அன்ஷுல் காம்போஜ் கேரளாவுக்கெதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ENG vs IND: '25 வயது தான் ஆகிறது; அபாயகரமான வீரர்' - வாஷிங்டன் சுந்தரைப் பாராட்டிய ரவி சாஸ்திரி

இந்திய அணியின் அடுத்த நீண்டகால ஆல்ரவுண்டராக வாஷிங்டன் சுந்தர் உருவெடுப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்திருக்கிறார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு ... மேலும் பார்க்க

Gill: `10,20 அல்ல, 90 விநாடி... அது நடந்திருக்க கூடாதுதான்; ஆனா..!’ - லார்ட்ஸ் சர்ச்சை குறித்து கில்

ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை உச்சகட்ட பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரையிலான மூன்று போட்டிகளில் இரண்டை இங்கிலாந்து கைப்பற்றியுள்ள சூழலில் இன்று மான்செஸ்டரில் தொடங்கும் நான்காவது போட்டிக்கு பெர... மேலும் பார்க்க

WCL : 'நடந்தது முடிந்து போன விஷயம்; ஆனால்...' - Ind v Pak போட்டி ரத்து குறித்து பிரட் லீ

வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் (WCL) பாகிஸ்தான் உடனான லீக் போட்டியில் ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலை சுட்டிக்காட்டி இந்திய வீரர்கள் விளையாட மறுத்துவிட்டனர். ... மேலும் பார்க்க

"உங்களைப் பார்த்து பொறாமைப்பட்டேன் என நினைக்கிறீர்களா?"- அஷ்வினிடம் ஹர்பஜன் சிங் கேள்வி

இந்திய அணியின்முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் அஷ்வினின்யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதில் ஹர்பஜன் சிங் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். அந்த நேர்காணலில் ஹர... மேலும் பார்க்க

பட்டோடி டிராபி பெயர் மாற்றம் குறித்து மௌனம் களைத்த ஆண்டர்சன்... சச்சின் பற்றி என்ன கூறினார்?

இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகளுக்கிடையே இங்கிலாந்து நடைபெறும் டெஸ்ட் தொடர் கடந்த 2007 முதல் பட்டோடி டிராபி தொடர் என்று அழைக்கப்பட்டு வந்தது.இவ்வாறிருக்க, தற்போது இங்கிலாந்து நடந்துகொண்டிருக்கும் தொடர... மேலும் பார்க்க