செய்திகள் :

Fitness: ``65 வயதில் 20 போல உணர்கிறேன்" - மூதாட்டியின் மிரளவைக்கும் புல்-அப்ஸ்; சீக்ரட் என்ன?

post image

ஒரு வயதான பெண்மணியின் உடல் செயல்பாடுகளைப் பற்றிக்கேட்டால், அவர் குச்சியை வைத்துக்கொண்டு தடுமாறி நடப்பதுதான் உங்கள் நினைவுக்கு வரும். ஒரு கம்பியில் திடமாக புஷ்-அப் எடுப்பதை கற்பனை செய்து பார்க்கவே கடினம். ஆனால் அந்த அளவு வலிமையுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார் தெரசா புர்கெட் என்ற 65 வயது பெண்மணி.

குட் மார்னிங் அமெரிக்கா நிகழ்ச்சியில் தோன்றிய அவர், "நம் உடலை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்துக்கொள்வதற்கு எந்த வயது நிர்ணமும் செய்யப்படவில்லை" எனக் கூறியிருக்கிறார்.

இந்தஇந்த வயதினர் இந்த உடல் பயிற்சிகள் செய்ய வேண்டும் என வைத்திருக்கும் வரையறைகளை தாண்டி சாதனை செய்துள்ளார் தெரசா.

வயதாகும்போது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் குறுக்கம் ஏற்படுவது இயல்புதான் எல்லாரையும் போல தெரசாவும் அவற்றை அனுபவித்திருக்கிறார்.

ஆனால் அவர் ஒரு நொடியில், 'நம் முடி நரைத்தலோ தோல் சுருக்கங்களோ நம்மை வயதானவராக உணரவைப்பதில்லை, தசைகளில் வலிமை குன்றுவதே நம்மை வயதானவராக உணர வைக்கிறது' என உணர்ந்திருக்கிறார்.

மேலும், அவர் தொடர்ந்து உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதனால் அவரது வயதின் கட்டுப்பாடு அவர் கையில் இருப்பதுபோல உணர்வதாகக் கூறுகிறார்.

நாள்கள் நகருவதையும், வருடங்கள் ஓடுவதையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் நாம் எப்படி வயதானவர் ஆகிறோம் என்பதை நம்மால் முடிவு செய்ய முடியுமென்கிறார் Fitness Influencer தெரசா.

சுறுசுறுப்பாக இருப்பதன் மூலமே தனது முதுமையை எதிர்கொள்கிறார் அவர். உங்களது உடல் ஃபிட்டாக இருப்பதற்கும் வயதுக்கும் தொடர்பு இல்லை என்கிறார்.

"நான் ஒன்றும் தடகள வீராங்கனை அல்ல. என் 50 வயதுவரை கனமான எடைகளைத் தூக்கியதோ, புல்-அப்ஸ் செய்ததோ இல்லை. இது எல்லாமும் ஒரு மனநிலைதான். நீங்கள் 65 வயதில் 20 வயதைப்போல உணர முடியும். 20 வயதில் 65 போலவும் உணர முடியும்." என்றா தெரசா.

'ஏஜ் இஸ் ஜஸ்ட் அ நம்பர்' என்பதற்கு தெரசா ஒரு உதாரணம். அதை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு அவர் ஒரு எடுத்துக்காட்டு. மற்றவர்களுக்கு அவர் இன்ஸ்பிரேஷன்.

பாகிஸ்தானில் பிறந்தநாளை கொண்டாடிய தாவூத்இப்ராகிம்... விழாவில் இந்திய தொழிலதிபர்கள் பங்கேற்பா?

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்படும் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறான் என்று செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கிறது. ஆனால், அதனை பாகிஸ்தான் அரசு மறுத்து வருகிறது. தாவூத் இப்ரா... மேலும் பார்க்க

சுனாமி: ``பாம்புகளுக்கு நடுவில் பெற்றெடுத்தேன் சுனாமியை.." - பேரலை நினைவுகளை பகிர்ந்த தாய்!

உலகை உலுக்கிய நிகழ்வுகள் என்ற பட்டியலை எடுத்தால் அதில் நிச்சயம் 2004-ம் ஆண்டு வந்த சுனாமி எனும் பேரலைக்கு மிக முக்கிய இடமிருக்கும். உறவுகளையும், நம்பிக்கையையும் இழந்து, இதிலிருந்து எப்போது மீளுவோம் என... மேலும் பார்க்க

Vinod Kambli: வினோத் காம்ப்ளி உடல்நிலை கவலைக்கிடம்; ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிறது. அவர் சமீபத்தில் மும்பை தாதர் சிவாஜிபார்க்கில் தனக்கு கிரிக்கெட் பயிற்சி கொடுத்... மேலும் பார்க்க

``மது விலக்கு இருப்பதால்.." - சூரத் டு பாங்காக் விமான பயணத்தில் விற்றுத்தீர்ந்த சரக்குகள்!

குஜராத் மாநிலத்தில் மதுவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வருவதாக கவலையும் தெரிவிகின்றனர். சுற்றுலா பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு ஹோட்டல்களில் மதுவி... மேலும் பார்க்க

Amazon நிறுவனருக்கு 2-வது திருமணம்; ரூ,5096 கோடியில் தடபுடல் ஏற்பாடுகள்... மணமகள் யார் தெரியுமா?

உலகப் பணக்காரர்களில் ஒருவரான அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் (60) கடந்த 2018-ம் ஆண்டு தனது முதல் மனைவி மெக்கன்சி ஸ்காட் என்பவரை விவாகரத்து செய்தார். இதற்காக, அவர் கணிசமான பங்குகளை தனது முன்னாள் மனைவிக்க... மேலும் பார்க்க

அரசியல் சாசனத்தின் மீது உறுதியேற்று திருமணம் செய்துகொண்ட ஜோடி! - வைரல் திருமணமும், பின்னணியும்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜாஷ்பூர் மாவட்டத்தில் இருக்கிறது கபு கிராமம். இந்தக் கிராமத்தில் கடந்த 18-ம் தேதி நடந்த திருமணம் தற்போது கவனம் ஈர்த்திருக்கிறது. மணமகள் பிரதிமா லஹ்ரேவுக்கும் மணமகன் எமன் லஹ்ரேவு... மேலும் பார்க்க