செய்திகள் :

GRT: தொடர்ந்து ஒன்பதாவது முறையாக பிளாட்டினம் விருதை வெல்லும் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்!

post image

1964 ஆம் ஆண்டு எளிமையான ஆரம்பத்துடன் நிறுவப்பட்ட ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், சிறந்த கலைத்திறன், நேர்த்தியான கைவினைகலைஞர்களின் படைப்புகள், மற்றும் நிலையான வாடிக்கையாளர்களின் நம்பிக்கை காரணமாக இந்தியாவின் நம்பகமான நகை நிறுவனமாக மென்மேலும் வளர்ந்துள்ளது.

அறுபது ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்ட ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், வாடிக்கையாளர்களின் வாழ்க்கையின் மிகவும் முக்கியமான நிகழ்வுகளை கொண்டாடும் நகைகளுக்கு இணையாக போற்றப்படுகிறது. தென்னிந்தியா முழுவதும் 65 மற்றும் சிங்கப்பூரில் ஒன்று என இன்று இந்த நிறுவனம் 66 ஷோரூம்களைக் கொண்டுள்ளது. தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினக் கற்களின் வளமான கலெக்ஷன்களை கொண்டுள்ளது.

GRT
GRT

இந்த சிறப்பான பாரம்பரியத்தை தொடர்ந்து, ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் சமீபத்தில் பிளாட்டினம் கில்டு இன்டர்நேஷனல் (பிஜிஐ) நடத்திய 'பிளாட்டினம் சீசன் ஆஃப் லவ் 2025'-ல் மறுபடியும் வெற்றியைப் பெற்றுள்ளது இந்த முக்கியமான வெற்றி, பிளாட்டினம் துறையில் அதன் முக்கியமான நிலையை வெளிப்படுத்தும்படி தொடர்ச்சியாக ஒன்பதாவது ஆண்டாக இந்த நிறுவனம் விருதை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

இந்த விருதுகள், தேசிய மற்றும் தென்னாட்டு அளவில் மிகச் சிறந்த பிளாட்டினம் விற்பனை சாதனைக்காக ஜிஆர்டி ஜுவல்லர்ஸை அங்கீகரித்துள்ளன. சுமார் 2017 ஆம் ஆண்டு முதல் அதன் நிலையான தலைமைத்துவத்தை பிரதிபலிக்கிறது தேசிய அளவிலான பாராட்டுகளில், சென்னையின் கோட்ஸ் ரோடு ஷோரூம் குழு 'செயின் ஸ்டோர்' பிரிவை வென்றது, கோட்ஸ் ரோடு ஷோரூமின் ஊழியர் 'விற்பனைப் பணியாளர் பிரிவில் வெற்றி பெற்றார் மேலும் சென்னையின் உஸ்மான் ரோடு ஷோரூம் அணி 'விற்பனைப் பணியாளர்' பிரிவில் முதல் இரண்டாம் இடத்தைப் பிடித்தது ரீஜெனல் அளவில், சென்னை தாம்பரம் ஷோரூம் மற்றும் உஸ்மான் ரோடு ஷோரூம் செயின் ஸ்டோர் பிரிவில் விருதுகளை வென்றன, மேலும் கோயம்புத்தூர் ஷோரூமின் பணியாளர் ஒருவர் சிறந்த 'விற்பனை ஊழியராக' அங்கீகரிக்கப்பட்டார்.

இந்த சாதனையைப் பற்றி பேசுகையில், ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர் திரு ஜி.ஆர். 'ஆனந்த்' அனந்தபத்மநாபன் அவர்கள் கூறுகையில், "சுமார் 1,650 விற்பனை நிறுவனங்களுக்கிடையில் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் மீண்டும் ஒருமுறை தன்னை தனித்துவப்படுத்திக் கொண்டுள்ளது. இது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது, இந்த அங்கீகாரம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கே சொந்தமானது, அவர்களின் அசைக்க முடியாத ஆதரவு எங்களை வழிநடத்தியது. எங்கள் வெற்றிக்கு உறுதியான அர்ப்பணிப்புடன் செயல்பட்ட எங்கள் குழுவினர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இது குறித்து ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு ஜி.ஆர், ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில் "இந்த தொடர்ச்சியான வெற்றியை சாத்தியமாக்கிய அர்ப்பணிப்புடன் செயல்படும் ஜிஆர்டி குழுவின் ஒவ்வொரு அங்கத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பிளாட்டினம் விற்பனைத் தலைமைத்துவத்திற்கான எங்கள் உறுதியை 'பிளாட்டினம் சீசன் ஆஃப் லவ் 2025; மீண்டும் உறுதிப்படுத்துகிறது எங்களின் இந்த அங்கீகாரத்திற்கும். மென்மேலும் உயரங்களை அடைய எங்களை தொடர்ந்து ஊக்குவிப்பதற்கும் நாங்கள் பிஜிஐக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

GRT: ஆடியை அசத்தலான ஆச்சரியங்களால் திருவிழாவாக மாற்றிய ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்

1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், அதன் மென்மையான தொடக்கத்திலிருந்து இன்று வரை இந்தியாவின் மிக பிரசித்திபெற்ற நகைக்கடைகளில் ஒன்றாக வளர்ந்து வருகிறது. அதன் கலை நயமான வடிவமைப்புகள், நுணுக்கம... மேலும் பார்க்க

தங்கம், வைரம் இல்லை, ஆனா... உலகின் மதிப்புமிக்க பொருளைத் தரும் மரங்கள்; இவ்வளவு மவுசு ஏன்?

அகர்வுட் என்று அழைக்கப்படும் அகில் மரம் உலகின் மிக விலையுயர்ந்த இயற்கைப் பொருட்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தங்கம், வைரம்போல் இது ஒளிர்வதில்லை ஒரு இருண்ட மணமிக்க மரமாக இருக்கிறது. இதிலிருந்து எடுக்க... மேலும் பார்க்க

Bitcoin: முகம் அறியப்படாதவர் உலகின் 12வது பணக்காரராக உயர்ந்தது எப்படி? மறைந்திருக்கும் மர்மம் என்ன?

பிட்காயின் (Bitcoin) எனும் மின்னணு நாணயத்தை உருவாக்கிய முகம் அறியப்பட்டாத சதோஷி நகமோட்டோ என்பவர், தற்போது உலகின் 12வது பணக்காரராக உயர்ந்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 128.92 பில்லியன் அமெரிக்க டாலர்கள... மேலும் பார்க்க

Trapit Bansal: மெட்டாவில் இணைய $100 மில்லியன் பெறுகிறாரா... யார் இந்த இந்தியர்?

த்ராபித் பன்சால் என்ற இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் மெட்டாவின் சூப்பர் இன்டெலிஜன்ட் யூனிடில் இணைய, ஓபன் ஏஐ (சேட் ஜிபிடி) நிறுவனத்திலிருந்து விலகியிருப்பது தொழில்நுட்ப ஆர்வலர்கள் மத்தியில் பேசுபொருளாக... மேலும் பார்க்க