வாக்குச்சாவடிக்குள் வாக்காளா்கள் கைப்பேசிகளை எடுத்துச் செல்ல அனுமதியில்லை: தோ்த...
GT vs LSG: "ஒரு கட்டத்தில் எங்களுக்கும் பிளேஆஃப் வாய்ப்பு இருந்தது" - வெற்றிக்குப் பின் பண்ட்
நடப்பு ஐ.பி.எல் சீசனில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத்தும், 7-வது இடத்தில் இருக்கும் லக்னோவும் அகமதாபாத்தில் இன்று (மே 22) களமிறங்கின. குஜராத் அணி டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வுசெய்ய, லக்னோ அணி மிட்செல் மார்ஷின் சதம் மற்றும் பூரனின் அரைசதத்தால் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து சேஸிங் இறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை மட்டுமே குவித்ததால், 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ வெற்றிபெற்றது. சதமடித்த மிட்செல் மார்ஷ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
வெற்றிக்குப் பிறகு பேசிய லக்னோ கேப்டன் பண்ட், "நிச்சயமாக சந்தோஷம். ஒரு அணியாக நாங்கள் நல்ல கிரிக்கெட் ஆட முடியும் என்பதைக் காட்டியிருக்கிறோம்.
ஒரு கட்டத்தில், பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பு எங்களுக்கு இருந்தது.
ஆனால், இவையெல்லாம் விளையாட்டின் ஓர் அங்கம்தான். எனவே, அதிலிருந்து கற்றுக்கொண்டு நன்றாக வரவேண்டும்.
RISHABH PANT SMASHED ONE OF THE CRAZIEST SIXES OF THE IPL. pic.twitter.com/aJFjsaDKIB
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 22, 2025
இன்று ஷாருக்கான் பேட்டிங் செய்த விதம், நிச்சயமாக பின்வரிசையில் (குஜராத் டைட்டன்ஸ்) நம்பிக்கையளித்திருக்கும்.
இந்தப்பக்கம், மார்ஷ், பூரன் என ஒட்டுமொத்த பேட்டிங் யூனிட்டும் விளையாடிய விதம் நன்றாக இருந்தது.
ஃபீல்டிங்கில் நாங்கள் சில தவறுகளைச் செய்தோம். அவற்றிலிருந்து கற்றுக்கொண்டு முன்னோக்கிச் செல்லவேண்டும்." என்று கூறினார்.