செய்திகள் :

Hindenburg: `எலான் மஸ்க் டு அதானி' -ஹிண்டன்பர்க் வெளிச்சத்திற்கு கொண்டுவந்த மோசடிகள்!

post image

'நான் பத்து பேரை அடிச்சு டான் ஆனவன் இல்லடா...நான் அடிச்ச 10 பேரும் டான் தான்!' என்கிற கே.ஜி.எஃப் மாஸ் டயலாக் யாருக்கு பொருந்துமோ, இல்லையோ...நிச்சயம் 'ஹிண்டன்பர்க் நிறுவன'த்திற்கு செட் ஆகும்.

ஹிண்டன்பர்க் என்றதும் நமக்கு சட்டென்று நியாபகத்திற்கு வருவது 'அதானி'. ஆனால், அதானியை தாண்டி பலரின் குட்டுகளை வெளி உலகிற்கு அம்பலமாக்கி உள்ளது ஹிண்டன்பர்க் நிறுவனம். இந்த நிறுவனத்தின் வலையில் எலான் மஸ்க் கூட தப்பவில்லை.

ஆக, ஹிண்டன்பர்க் வெளியிட்ட சில முக்கிய நகர்வுகளை பற்றி தெரிந்துகொள்வோம்...

ஹிண்டன்பர்க் நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பே, ஆன்டர்சன் சில, பல மோசடிகள் குறித்து அறிக்கைகள் வெளியிட்டிருந்தாலும், நிறுவனத்தை தொடங்கியப்பின் வெளியிட்ட முதல் அறிக்கை 'EROS இன்டர்நேஷனல்' என்னும் இந்திய திரைப்பட கம்பெனியை பற்றியது தான்.

முதலிலேயே, இந்திய நிறுவனம்...

முதலிலேயே, இந்திய நிறுவனம்...

இந்த இந்திய நிறுவனம் அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியிலிடப்பட்டிருந்தது. ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை மூலம் EROS நிறுவனத்தின் கணக்கு குளறுபடிகள், கணக்கில் காட்டப்படாத பரிவர்த்தனைகள், பொய் வருமானம் போன்ற மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து, 2023-ம் ஆண்டு, இந்த நிறுவனம் நியூயார்க் ஸ்டாக் எக்சேஞ்ச் நிறுவனத்தில் இருந்து தூக்கப்பட்டது.

மேலும், இந்த நிறுவனத்தின் அறிக்கை செபிக்கு பெரிய உதவியாக இருந்தது. இந்த அறிக்கைக்கு பிறகு, செபியும் EROS நிறுவனத்தின் மோசடிகளை கண்டுபிடித்து பங்குச்சந்தையில் அந்த நிறுவனத்திற்கும், அதன் உரிமையாளருக்கும் அபராதத்தையும், தடையையும் விதித்தது.

'ஃபிராட்' புரோமஷனல் வீடியோ!

2020-ம் ஆண்டு, நிக்கோலா (Nikola) என்னும் எலெக்ட்ரிக் டிரக் தயாரிப்பு நிறுவனத்தின் மோசடி குறித்து அறிக்கை வெளியிட்டது ஹிண்டன்பர்க்.

இந்த அறிக்கையின் சிறப்பம்சமே, நிக்கோலா நிறுவனத்தின் புரோமஷனல் வீடியோவில் தான் அமைந்துள்ளது. நிக்கோலா நிறுவனம் அதன் தயாரிப்பு டிரக் ஒன்றின் ஓடும்திறனை காட்ட புரோமஷனல் வீடியோவை வெளியிட்டு, முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீடுகளை பெற்றது.

அதன் பிறகு, ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 'அந்த புரோமஷனல் வீடியோவில் குறிப்பிட்ட டிரக் ஓடுவதுப்போல காட்டுவது உண்மையல்ல. அது பாலைவனத்தின் உச்சிக்கு 'டோ' செய்து கொண்டுசெல்லப்பட்டு, பின்னர், ஈர்ப்பு விசைக்கேற்ப டிரக் கீழே உருண்டு வருகிறது. அதை தான் நிக்கோலா நிறுவனம் டிரக் கடினமான பாதைகளில் பயணிப்பதாகக் காட்டியுள்ளது" என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

ஆரம்பத்தில், இதை நிக்கோலா நிறுவனம் முழுவதுமாக மறுத்தாலும், பின்னர், 'அது உண்மை தான்' என்று ஒத்துக்கொண்டு, அந்த நிறுவனத்தின் தலைவர் பதவி விலகினார்.

எலான் மஸ்க் 'ஜகா'!

எலான் மஸ்க் 'ஜகா'!

2022-ம் ஆண்டு, எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்ததையடுத்து, அவர் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தொகையை குறைக்கலாம் அல்லது ஒப்பந்தத்தையே வேண்டாம் என்று கைவிடலாம் என்று கணித்து, ஹிண்டன்பர்க் நிறுவனத்திடம் இருந்த ட்விட்டர் பங்குகளை விற்பதாக (ஷார்ட் செல்லிங்) அறிவித்தது. இந்தப் பங்குகள் அமோகமாக விற்பனையாகின.

இந்த அறிவிப்பு வெளியான நான்கு நாள்களிலேயே, மஸ்க் தான் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற விரும்புவதாக அறிவித்தார். இதனால், ட்விட்டரின் பங்குகள் தாறுமாறாக குறைந்தது.

சட்டப்படி, மஸ்க் இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற முடியாது என்பதை கணித்து, ஹிண்டன்பர்க் நிறுவனம் மீண்டும் அப்போது குறைந்திருந்த விலைக்கு தான் விற்ற பங்குகளை வாங்கி இரண்டு பக்கத்திலும் லாபம் பார்த்தது.

அதானி...

2023-ம் ஆண்டு ஜனவரி மாதம், 'அதானி குழுமத்தின் பங்குகளை அவரது குடும்பத்தினரே அதிக அளவில் வைத்திருக்கின்றனர். அதானி நிறுவனத்திற்கு வெளிநாட்டில் இருந்து வந்த முதலீடுகள், அவரது குடும்ப உறுப்பினர்கள் வெளிநாட்டில் வைத்திருக்கும் மோசடி நிறுவனங்களில் இருந்து வந்தது ஆகும். அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு, அதன் நிறுவனங்களில் தொழிலுக்கு சம்பந்தமில்லாத அளவில் இருக்கிறது" என்று அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கை வெளியிட்டது ஹிண்டன்பர்க் நிறுவனம்.

இதனால், அதானியின் பங்கு மதிப்பு பெருமளவில் வீழ்ச்சியை கண்டது. இதிலிருந்து தட்டு தடுமாறி தான் மீண்டது அதானி நிறுவனம். இப்போது வரை சென்றுக்கொண்டிருக்கும் இந்த வழக்கில் 'ஹிண்டன்பர்க் அறிக்கை தகவல்கள் பொய்யானது' என்ற நிலைப்பாட்டுடன் தொடர்கிறது அதானி குழுமம்.

செபி ஏன் கண்டுகொள்ளவில்லை?!

செபி ஏன் கண்டுகொள்ளவில்லை?!

அதே ஆண்டு, செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரி புச்சுக்கும் அதானி நிறுவனத்தின் மோசடிகளில் பங்கு உள்ளது. அதனால் தான், அந்தக் குழுமத்தின் மோசடிகளை செபி கண்டுகொள்ளவில்லை. மேலும், அவருக்கும், அவரது கணவருக்கும் வெளிநாட்டில் இயங்கும் அதானி குழுமங்களில் பங்கு உண்டு என்று குற்றம்சாட்டியிருந்தது.

கடைசியாக...

'கடைசியாக, பொன்சி திட்டம் சம்பந்தமான மோசடிகள் குறித்த அறிக்கையை கூட சமர்பித்த பின்னர் தான்' என்று ஆண்டர்சன் தனது ஃபேர்வல் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அறிக்கை என்னவென்றால், பொய்யான முதலீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தி மக்களை ஏமாற்றி சுமார் 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள மோசடியை செய்துள்ளது ஜெ அண்ட் ஜெ பர்சேஸிங் நிறுவனம். இதை வெளிகொண்டு வந்ததில் ஹிண்டன்பர்க் நிறுவனத்திற்கு பெரிய பங்கு உண்டு.

இவை எல்லாம் சாம்பிள்களை, இன்னும் மெயின் பிக்சர்கள் பல பல இருக்கின்றது.

இத்தனையை செய்திருக்கும் ஹிண்டன்பர்க் நிறுவனத்திற்கு பின்னால் இருக்கும் ஒருவர் 'ஆண்டர்சன்'.

ஹிண்டன்பர்க் நிறுவனர் பேக் கிரவுண்ட்
ஹிண்டன்பர்க் நிறுவனர் பேக் கிரவுண்ட்

ஹிண்டன்பர்க் நிறுவனர் பேக் கிரவுண்ட்

ஆரம்பத்தில், நிதி ஆய்வறிக்கை நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த நேட் ஆன்டர்சன், 2017-ம் ஆண்டு சொந்தமாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தை தொடங்கினார்.

'எனக்கு குடும்ப பின்னணி கிடையாது. எனது சொந்தகாரர்கள் யாரும் இந்தத் துறையில் முன்பே இல்லை. நான் அரசுப்பள்ளியில் தான் படித்தேன்.

நான் திறமையான சேல்ஸ்மேன் கிடையாது. எந்த உடையை அணிய வேண்டும் என்று எனக்குத் தெரியாது. கோல்ப் விளையாட தெரியாது. 4 மணி நேரம் மட்டும் தூங்கி, மற்ற நேரம் எல்லாம் உழைக்கும் சூப்பர் மேன் கிடையாது நான்.

நான் இந்த நிறுவனத்தைத் தொடங்கியப்போது கையில் காசு கிடையாது. இந்த நிறுவனம் தொடங்கிய உடனேயே, 3 வழக்குகளை சந்தித்தேன்.

உலக அளவில் புகழ்பெற்ற பிரயான் வுட் என்னும் வழக்கறிஞர் இல்லையென்றால், நான் அப்போதே தோற்றிருப்பேன். என்னிடம் பணம் இல்லையென்றாலும், எனக்காக வாதிட்டார்" என்று ஆண்டர்சன் நேற்று வெளியிட்டுள்ள தன்னுடைய ஃபேர்வெல் கடிதத்தில் ஆரம்ப காலத்தைய அவருடைய நிதி நிலையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

ஜீரோ டு ஹீரோ நிலையை எட்டிய ஆண்டர்சன் திடீரென்று ஹிண்டன்பர்க் நிறுவனத்தை கலைத்துள்ளார்.

நிச்சயம் பெரிய மோசடி பேர்வழிகளுக்கு நிம்மதி பெருமூச்சு இது!

Hindenburg: 'ஆம்புலன்ஸ் டிரைவர் முதல் ஹிண்டன்பர்க் சாம்ராஜ்யம் வரை...' - யார் இந்த நேட் ஆண்டர்சன்?!

நேட் ஆண்டர்சன் - பல பெரும் நிறுவனங்களின் முதலாளிகளுக்கு கிலியாக இருந்த ஹிண்டன்பர்க் நிறுவனத்திற்கு பின்னால் இருந்த ஒற்றை ஆள்.ஈரோஸ், நிக்கோலா, அதானி...என மோசடி செய்யும் நிறுவனங்களின் முகத்திரையை கிழித்... மேலும் பார்க்க

`தெப்பம் கட்டி கன்னிமாரு சாமி வெச்சு...!' - மேற்கு மாவட்ட மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்

தைப்பொங்கலுக்கு அடுத்த நாளு மாட்டுப்பொங்கலு. இந்தப் பொங்கலை ஒவ்வொரு ஊர்லயும் ஒவ்வொரு மாதிரி கொண்டாடுவாங்க. மேக்க இருக்க கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, அதை சுத்தி இருக்க ஊர்ல மாட்டுப்பொங்கலை எப்படி ... மேலும் பார்க்க

ரூ.50 டு ரூ.500; பொங்கல் பானை, வாட்டர் பாட்டில் இன்னும் பல... மண்பாண்ட தொழில் ஸ்பாட் விசிட்!

பொங்கல் என்றாலே கொண்டாட்டம் தான்! பொங்கலுக்கு விடுமுறை ஒருபுறம், விருந்தினர்கள் மறுபுறம் என வீடு விசேஷமாக காட்சியளிக்கும். புத்தாடை உடுத்தி, குலதெய்வ கோயிலுக்குச் சென்று, பொங்கல் பானை வைத்து, படையல் ப... மேலும் பார்க்க

பொங்கல் : வேப்பிலை, பீளைப்பூ, ஆவாரம்பூ... காப்புடன் 'இதை'யும் சேர்த்து கட்டுங்க... ஏன்னா?

காப்பு கட்டுபொங்கல்பொங்கல் என்று சொன்னதும் சர்க்கரை பொங்கல், கரும்பு, ஜல்லிக்கட்டு என்பதெல்லாம் நினைவுக்கு வருவதைத் தாண்டி, இன்னொரு முக்கிய விஷயமும் உண்டு. அந்த விஷயத்தோடு தான் பொங்கல் பண்டிகையே நம் வ... மேலும் பார்க்க

தேங்காய் சிரட்டையில் புத்தர், அம்பேத்கர்... கலைநயமிக்க பொருள்களை உருவாக்கி அசத்தும் இளைஞர்!

படைப்பாற்றல் என்ற சொல் புதிய யோசனை, கலை, கண்டுபிடிப்பு என பலவற்றை நோக்கி நம்மை இழுத்துச் செல்லும். அந்த ஆற்றல்தான் நம்மை வித்தியாசப்படுத்தி, முன்னோக்கி நகர்த்திச் செல்லும். அப்படி ஒரு வியப்பான படைப்பா... மேலும் பார்க்க