செய்திகள் :

HipHop Adhi: ``10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில்" - தொடங்கிய பயண நினைவுகளைப் பகிர்ந்த ஹிப்ஹாப் ஆதி

post image

தமிழ் இசை உலகில் ஹிப் ஹாப் இசையை முன்னெடுத்துச் சென்ற பிரபல இசைக் கலைஞர்களில் ஆதி - ஜீவா முக்கியமானவர்கள்.

2005-ம் ஆண்டு ஆர்குட் (Orkut) மூலம் சந்தித்த இருவரும், இசையின் மீது காட்டிய ஆர்வத்தின் காரணமாக தமிழில் ஒரு சுதந்திரமான இசைக் குழுவை உருவாக்க முடிவு செய்தனர். அதுதான் 2010-ம் ஆண்டு "ஹிப் ஹாப் தமிழா" இசைக் குழு.

2015-ம் ஆண்டு ஆம்பள, இன்று நேற்று நாளை, தனி ஒருவன் என மூன்று படங்களுக்கும் இசை அமைத்து தங்களுக்கான இலக்கை நோக்கி பயணித்தனர்.

இந்தப் படங்களின் இசை வெகு மக்களால் கவரப்பட்டாலும் தனி ஒருவன் படத்தின் இசை பெரும் கவனம் பெற்றது. இந்த நிலையில், 2015-ம் ஆண்டு தனி ஒருவன் இயக்குநர் ராஜாவுடன் ஹிப்-ஹாப் குழு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இசையமைப்பாளரும், நடிகருமான ஆதி தன் சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அதில், ``பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளின் அதிகாலையில் எடுக்கப்பட்ட புகைப்படம்! ராஜா அண்ணா'ஆதி, ஜீவா - நாமெல்லாம் ஒரே காரில் போயிடலாமா?' எனக் கேட்டது இன்றும் எனக்கு பசுமையாக நினைவிருக்கிறது.

எங்களுக்கு அப்போது எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால் உற்சாகம் நிறைந்த இதயம்! இந்த நாள் எங்கள் பயணத்தில் எப்போதும் சிறப்பானது" என்று உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்துள்ளார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Sivakarthikeyan: ``என்றும் நீதான் என் அன்பே" - 15 ஆம் திருமண நாள்; சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் நேற்று (ஆகஸ்ட் 27, 2025) தங்களது 13வது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடினார். 2011 மே 16ல் நிச்சயதார்த்தம் நடைபெற்று, அதே ஆண்டு ஆகஸ்ட் 2... மேலும் பார்க்க

`லவ் யூ நண்பா' - ஜாலியாக வைப் பண்ணும் பிரபுதேவா - வடிவேலு; இணையத்தில் வைரலாகும் வீடியோ

நடிகர் பிரபுதேவா, வடிவேலுடன் இருக்கும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத காமெடி கூட்டணிகளில் ஒன்று பிரபுதேவா - வடிவேல... மேலும் பார்க்க

``ஸ்டாலின் Uncle என விஜய் சொன்னது எனக்கு தவறா தெரியல'' - K.S ரவிக்குமார் சொல்லும் காரணம்

தவெக தலைவர் விஜய் தனது கட்சியின் இரண்டாவது மாநாட்டை கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி மதுரையில் நடத்தி இருந்தார். அந்த மாநாட்டில் திமுக, அதிமுக, பாஜக கட்சிகளை விஜய் விமர்சித்து பேசியிருந்தார். குறிப்பாக ஸ்டாலி... மேலும் பார்க்க

Nivetha Pethuraj: காதலரை அறிமுகப்படுத்திய நிவேதா பெத்துராஜ்; யார் அவர்?

தனது காதலரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ்.‘ஒருநாள் கூத்து’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் நிவேதா பெத்துராஜ்.அதன்பின் ‘டிக் டிக... மேலும் பார்க்க