செய்திகள் :

HIT 3: "எப்போதும் தமிழ், மலையாள ரசிகர்களின் விமர்சனங்களைத்தான் பார்ப்பேன்; ஆனா இப்போ..." - நானி

post image

நானி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'ஹிட்: தேர்ட் கேஸ்' (HIT: Third Case) சைலேஷ் கொலனு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

நானிக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். மே 1 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்திற்கான புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

'ஹிட்: தேர்ட் கேஸ்'
'ஹிட்: தேர்ட் கேஸ்'

அந்தவகையில் நேற்று (ஏப்ரல் 26) இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

அதில் பேசிய நானி, “இந்த மேடையில் தமிழில் பேசுவதற்குப் பயமாக இருக்கிறது. நிச்சயமாக முழுமையாகக் கற்றுக்கொண்டு ஒரு நாள் இங்கு வந்து தமிழில் பேசுவேன்.

தமிழ் சினிமாத்தான் என்னுடைய கரியருக்கு வடிவம் கொடுத்தது என்று நிறைய நேர்காணலில் சொல்லி இருக்கிறேன். 2012 ஆம் ஆண்டு படப்பிடிப்பிற்காக நான் சென்னையில்தான் தங்கி இருந்தேன்.

அப்போது இங்குள்ளவர்கள் என்னை அன்பாகப் பார்த்துக்கொண்டார்கள். எப்போது நான் சென்னைக்கு வந்ததாலும் அந்த அன்பு எனக்குக் கிடைக்கும். தெலுங்கு ரசிகர்கள் என் படம் நன்றாக இருந்தாலும் கொண்டாடுவார்கள் நன்றாக இல்லையென்றாலும் என் மீது வைத்திருக்கும் அன்பால் கொண்டாடுவார்கள்.

அதனால் என்னுடைய படங்கள் வெளியாகும் போது உண்மையில் படம் எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்வதற்காக நான் தமிழ் மற்றும் மலையாள ஆடியன்ஸின் விமர்சனங்களைத்தான் பார்ப்பேன்.

நானி
நானி

ஆனால் இப்போது தமிழ் மற்றும் மலையாள ஆடியன்ஸும் என் மீது வைத்திருக்கும் அன்பால் என்னுடைய படத்தைக் கொண்டாடுகிறார்கள்.

அதனால் சரியான விமர்சனத்தை யாரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது என்று தெரியவில்லை" என்று சிரித்துக்கொண்டே பேசியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஹிட் 1 மற்றும் ஹிட் 2 படங்களைப் பார்க்கவில்லை என்றாலும் கூட ஹிட் 3-யை பார்க்கலாம். முதல் 2 பாகங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை.

'ஹிட்: தேர்ட் கேஸ்' படத்தைப் பார்த்தால் உங்களுக்கு ஒரு சிறந்த அனுபவம் கிடைக்கும். இந்தப் படத்திற்காகக் கடினமாக உழைத்திருக்கிறோம். கண்டிப்பாக உங்களுக்கு இந்தப் படம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Nani: ``இவ்வளவு சீக்கிரமா `A' படம் பண்ணுவேன்னு நினைக்கல!'' - நானி பேட்டி

டோலிவுட்டின் 'ஹிட்' பிரான்சைஸிலிருந்து மூன்றாவது படமாக 'ஹிட்: தேர்ட் கேஸ்' (HIT: Third Case) படம் உருவாகியிருக்கிறது. நானி, ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை சைலேஷ் கொலனு இயக்கியிருக்க... மேலும் பார்க்க

Mahesh Babu: ரியல் எஸ்டேட் மோசடி; மகேஷ் பாபுவுக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை - நடந்தது என்ன?

பண மோசடி வழக்கு தொடர்பாக தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. ரியல் எஸ்டேட் மோசடிபோலி ஆவணங்களைத் தயாரித்து ஒரே சொத்தை பலமுறை விற்பனை செய்து பண மோசடியில் ஈட... மேலும் பார்க்க

Pooja Hegde: ``தெலுங்கு படங்களில் நடிக்காதது ஏன்?'' - பூஜா சொன்ன காரணம்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து ரெட்ரோ படத்தில் நடித்துள்ளா பூஜா ஹெக்டே. இந்த படத்தில் இடம்பெற்ற துள்ளலான கனிமா பாடல் மூலம் இணையத்தைக் கலக்கியுள்ளார். சில ஆண்டுகள் முன்பு ... மேலும் பார்க்க

Tamannaah: `மில்கி பியூடி' என அழைக்கப்படுவது குறித்து ஓப்பனாக பேசிய தமன்னா!

பான் இந்தியா ஸ்டாராக வலம் வரும் நடிகை தமன்னா பாட்டியாவின் ஓடெல்லா 2 திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. இந்த திரைப்படத்துக்கான புரோமோஷன்களில் கலந்துகொண்ட தமன்னா, தனது கரியர் குறித்தும் பல ஆண்டுகளாக ... மேலும் பார்க்க

AA22 x A6: அல்லு அர்ஜூன் அட்லி இணையும் `AA22' பட அப்டேட் வெளியானது

புஷ்பா படத்தின் முதல் பாகத்தின் வசூல் வெற்றியை அடுத்து வெளியான இரண்டாம் பாகமும் வசூலைக் குவித்து கவனம் ஈர்த்திருந்தது. படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி ரூ.1500 கோடியைத் தாண்டியதாக அறிவிக்கப்ப... மேலும் பார்க்க

Nani: ``என் மகனுடன் ஜெர்சி படத்தைப் பார்த்த அந்த அனுபவம்..!'' - நெகிழும் நானி

"எனக்கு போ கதாபாத்திரம் ரொம்ப பிடிக்கும். என்னுடைய வாழ்க்கைக்கான பாடத்தை எல்லாம் கற்றுக் கொண்டது போவிடமிருந்துதான். நான் சோர்வாக உணரும்போதெல்லாம் அந்த திரைப்படத்தில் வரும் வசனங்களை நினைத்துக்கொள்வேன்.... மேலும் பார்க்க