குஜராத்தில்100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல்: அமைச்சா் மகன் கைது
Maanan: "பலே பாண்டியா... அப்படிச் சொல்வதற்குத் துணிச்சல் வேண்டும்" - சூரியைப் புகழும் வைரமுத்து
சூரி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில், பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான 'மாமன்' திரைப்படம் நேற்று (மே 16) வெளியானது.
காமெடி கலந்த எமோஷனல் திரைப்படமான `மாமன்', திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
இவ்வாறிருக்க, சூரியின் ரசிகர்கள் சிலர் மாமன் திரைப்படம் வெற்றியடைய வேண்டுமென மண் சோறு சாப்பிட்டிருக்கிறார்கள்.

இதையறிந்த சூரி, "ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டது முட்டாள்தனமானது. ஒரு படத்தோட கதை நன்றாக இருந்தால் அது ஓடப் போகுது.
மண் சோறு சாப்பிட்டால் படம் ஓடப்போகுதா என்ன? இந்த காசுக்குச் சிலருக்கு தண்ணீர் வாங்கிக் கொடுத்திருக்கலாம்,
சாப்பாடு கொடுத்திருக்கலாம். இப்படியான விஷயங்கள் பண்றவங்க என்னுடைய ரசிகர்களாக இருப்பதற்குத் தகுதி இல்லாதவங்க" என்று கண்டித்தார்.
இந்த நிலையில், சூரியின் இத்தகைய செயலைக் கவிஞர் வைரமுத்து பாராட்டி எக்ஸ் தளத்தில், "திரைக்கலைஞர் தம்பி சூரியைப் பாராட்டுகிறேன்.
தனது திரைப்பட வெற்றிக்காக மண்சோறு தின்ற ரசிகர்களைப் பகிரங்கமாகச் சாடியிருக்கிறார். மண்ணிலிருந்து தானியம் வரும்; தானியம் சோறாகும். ஆனால், மண்ணே சோறாக முடியாது.

இந்த அடிப்படைப் பகுத்தறிவு இல்லாதவர்கள் தன் ரசிகர்களாக இருக்க முடியாது என்று சொல்வதற்குத் துணிச்சல் வேண்டும்.
கதாநாயகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ரசிகர் கூட்டத்தை இப்படி நெறிப்படுத்தி வைத்திருந்தால் கலையும் கலாசாரமும் மேலும் மேலும் மேம்பட்டிருக்கும்.
மண்சோறு தின்றால் ஓடாது மக்களுக்குப் பிடித்தால் மாமன் ஓடும். பகுத்தறிவு காத்திருக்கும் சூரியை ‘பலே பாண்டியா’ என்று பாராட்டுகிறேன்." என்று பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...