செய்திகள் :

Madharaasi: "என் முகத்தை எடிட் செய்து நான் ஸ்டீராய்டு எடுத்துக் கொண்டதாக..." - சிவகார்த்திகேயன்

post image

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'மதராஸி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிற வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது.

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ருக்மினி வசந்த், பிஜூ மேனன், வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

சிவகார்த்திகேயன் - முருகதாஸ் - Madharaasi
சிவகார்த்திகேயன் - முருகதாஸ் - Madharaasi

படத்தின் ப்ரோமோஷனுக்காக பல பகுதிகளுக்கும் படக்குழுவினர் பம்பரமாக சுற்றி வருகிறார்கள்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்வைத் தொடர்ந்து அங்கு சிவகார்த்திகேயனும், ருக்மினி வசந்தும் பேட்டிகள் கொடுத்திருக்கிறார்கள். அதில் தன்னைப் பற்றி பேசப்பட்ட வதந்திகள் குறித்துப் பேசியிருக்கிறார் எஸ்.கே.

தொகுப்பாளர், "உங்களைப் பற்றிய வதந்திகளும், பொய் தம்ப்நெயில்களும் பரப்பப்பட்டிருக்கின்றனவா?" என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், "நிறைய அது போல வந்திருக்கின்றன.

'அமரன்' படத்தின்போது என்னுடைய முகத்தை வைத்து பொய்யாக எடிட் செய்து எய்ட் பேக்ஸ் வைத்திருப்பதாகப் போட்டார்கள்.

அந்த நேரத்தில் எனக்கு ஒரு பேக்கூட கிடையாது. என்னுடைய உடலை அப்போதுதான் மெருகேற்றிக் கொண்டிருந்தேன்.

Madharaasi - Sivakarthikeyan
Madharaasi - Sivakarthikeyan

சமீபத்தில் முற்றிலுமாக இதை மாற்றி என் முகத்தைப் பெரிதாக்கி, 'இவர் ஸ்டீராய்டுகளை பயன்படுத்தினார். அதனால் இவரின் உடல்நலம் இப்படி ஆகிவிட்டது. எப்படி ஆகிவிட்டார் பாருங்கள்' எனப் பதிவிட்டார்கள்.

அதையெல்லாம் பார்க்கும்போது ஹையோ என்ற ரியாக்ஷன்தான் எனக்குள் எழும்." எனக் கூறி முடித்துக் கொண்டார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

STR 49: "வெற்றி நடை வீர நடை வெல்லும் இவன் படை" - கலைப்புலி தாணு சொன்ன சிம்பு - வெற்றிமாறன் அப்டேட்!

வெற்றிமாறன் - சூர்யா கூட்டணியில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் படப்பிடிப்பு எதிர்நோக்கிக் காத்திருக்கும் திரைப்படம் 'வாடிவாசல்'. பல்வேறு தொழில்நுட்பக் காரணங்களால் இப்படத்திற்காக வேலைகள் இன்னும் தொடங்... மேலும் பார்க்க

காந்தி கண்ணாடி: "வேடிக்கை பார்த்த ஒரு பையனுக்கு அன்பும், ஆதரவும் கொடுத்திருக்கீங்க" - KPY பாலா

`கலக்கப் போவது யாரு', `குக்கு வித் கோமாளி' போன்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் KPY பாலா. தற்போது ஷெரீஃப் இயக்கத்தில் விவேக் மெர்வின் இசையில் உருவாகி இருக்கும் 'காந்தி கண்ணாடி' படத்தில் ... மேலும் பார்க்க

KPY Bala: "படத்தில் கடைசி 5 நிமிடத்தைப் பார்த்து அழுதேன்" - காந்தி கண்ணாடி படம் குறித்து மா கா பா

`கலக்கப் போவது யாரு', `குக்கு வித் கோமாளி' போன்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் KPY பாலா. தவிர பல கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்திக் கொடுத்தது, பல குழந்தைகளைப் படிக்க வைப்பது என... மேலும் பார்க்க