செய்திகள் :

Manimegalai : `தொகுப்பாளினியாக மீண்டும் களமிறங்கும் விஜே மணிமேகலை... குவியும் வாழ்த்துகள்!'

post image

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற நடன நிகழ்ச்சி `டான்ஸ் ஜோடி டான்ஸ்'. இதன் அடுத்த சீசன் விரைவிலேயே தொடங்க இருக்கிறது. மெகா ஆடிஷன் சமீபத்தில் நடந்து முடிந்திருந்த நிலையில் விரைவிலேயே இந்த நிகழ்ச்சி குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டான்ஸ் ஜோடி டான்ஸ்

இதுவரை இந்த நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர், சினேகா மற்றும் சங்கீதா ஆகியோர் நடுவர்கள் ஆக இருந்தனர். இந்த நிகழ்ச்சி மூலமாக பல நட்சத்திரங்கள் உருவாகி இருக்கிறார்கள். `சந்தியாராகம்' தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் குரு இந்த நடன நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர்.

தற்போது இந்த நிகழ்ச்சியில் நடுவர்கள் குழுவில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. நடிகை சங்கீதாவிற்கு பதிலாக இந்த புதிய சீசனில் நடிகை வரலட்சுமி நடுவராக களம் இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரலக்ஷ்மி சரத்குமார்

அத்துடன் விஜய் டிவியில் `குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அவர் தற்போது ஜீ தமிழுக்கு என்ட்ரியாகி இருக்கிறார். மிர்ச்சி விஜயுடன் சேர்ந்து மணிமேகலை இந்த நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

இதனையடுத்து மணிமேகலையின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

7 முதல் 3 மணி வரை விடாத போன் கால்; ஓட்டமெடுத்த தேர்தல் அலுவலர்; செய்தி வாசிப்பாளர் சங்கப் பஞ்சாயத்து

சுமார் 500 பேர் உறுப்பினர்களாக இருக்கும் தமிழ் செய்தி வாசிப்பாளர் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் தேர்தல் இம்மாதக் கடைசியில் நடக்கவிருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது.தேர்தல் நடத்தும் ... மேலும் பார்க்க

Siragadikka aasai : வீண் வம்பு, ஈகோ யுத்தம் - அருணை வீடியோ எடுத்த முத்து!

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவுக்கு எதிராக அருண் கதாபாத்திரமும் மீனாவுக்கு எதிராக சிந்தாமணியும் அறிமுகப்படுத்தப்பட்டனர். சிந்தாமணி விஜயாவின் நடனப்பள்ளியில் இணைந்து மீனாவுக்கு எதிராக செயல்பட்டு வருகிற... மேலும் பார்க்க

Kayal Serial: ஒரு வருடத்திற்கு மேல் கர்ப்பமாக இருக்கும் தேவி; வளைகாப்பு குறித்து ரசிகர்கள் கேள்வி

கயல் சீரியலில் தேவிக்கு வளைகாப்பு நடத்தக் கயல் ஏற்பாடு செய்கிறார். ஆனால் தேவியின் கணவர் தாயின் பேச்சைக் கேட்டு வளைகாப்புக்கு வர மறுக்கிறார்.கயல் தன் தங்கை தேவியின் கணவர் விக்னேஷை எப்படியாவது சமாதானப்ப... மேலும் பார்க்க

Lollu Sabha Udhaya: `அப்பாவுக்கு சர்ஜரி பண்ணி இடது கால் எடுத்துட்டோம்!' - உதயாவின் மகள்

சந்தானத்தின் பல காமெடி வசனங்களை எழுதியவர் நடிகர் சிரிக்கோ உதயா.இவர் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பலருக்கும் பரிச்சயமானவர். நடிப்பை தாண்டி இவர் இசையின் பக்கமும் கவனம் செலுத்தியிருக்கிறார். சினிமாவை த... மேலும் பார்க்க

`வா வாழலாம்..!’ திருமண தேதியை அறிவித்தது, தமிழ் பிக்பாஸ் மூலம் காதலித்து கரம் பிடிக்கும் முதல் ஜோடி!

2023 ம் ஆண்டு காதலர் தினத்தன்று காதலை முறைப்படி உலகத்துக்குச் சொன்ன பிக்பாஸ் ஜோடியான அமீர் - பாவ்னி, இந்தக் காதலர் தினத்தில் கல்யாண அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.வரும் ஏப்ரல் மாதம் இவர்களது திருமணம் ந... மேலும் பார்க்க

Siragadikka aasai : முத்துவிடம் இரண்டு பேர் சிக்கிவிட்டனர், அடுத்தது யார்?!

சிறகடிக்க ஆசை சீரியலின் கடந்த இரண்டு நாள் எபிசோடுகள் விறுவிறுப்பாக நகர்ந்தன. மீனாவின் தொழிலில் பிரச்னைகளை ஏற்படுத்த நினைக்கும் சிந்தாமணி, விஜயாவை நட்பாக்கி சூழ்ச்சி செய்ய நினைத்தார். ஆனால் அவர்கள் போன... மேலும் பார்க்க