திருமண ஆசை காட்டி கிரிப்டோகரன்சி மோசடி; தேனி இளைஞரிடம் 88 லட்சம் பறித்த கும்பல் ...
Mohanlal: "நான் என் நண்பர் மம்மூட்டிக்காக பூஜை செய்தேன்; இதில் என்ன தவறு?" - மனம் திறந்த மோகன்லால்
மலையாள சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர்கள் மோகன் லால், மம்மூட்டி.
சமீபத்தில் மம்மூட்டிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்தன. பிறகு மம்மூட்டி தரப்பில் அவர் நலமுடன் இருப்பதாக விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 'எம்புரான்' படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாகியிருக்கும் மோகன்லால், சமீபத்தில் சபரிமலைக்குச் சென்றிருந்தார். அப்போது மம்மூட்டியின் ஆரோக்கியத்திற்காக வேண்டி பூஜை செய்திருந்தார். இந்தத் தகவல் நட்பின் எடுத்துக்காட்டாக வைரலாகியிருந்தது. இருவரின் நட்பையும் அவர்களது ரசிகர்கள் நெகிழ்ந்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இதற்கிடையில் மலையாள பத்திரிக்கையாளரான அப்துல்லா என்பவர், "இஸ்லாமியராக இருக்கும் மம்மூட்டி அல்லாஹ்விடம் மட்டும்தான் பிரார்த்தனை செய்ய வேண்டும். மம்மூட்டிக்கு தெரிந்தே இது நடந்திருந்தால், இதற்காக மம்மூட்டி மன்னிபுக் கேட்க வேண்டும்" என கருத்து பதிவிட்டு இருந்தது சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.
இந்நிலையில் 'எம்புரான்' படத்தின் புரோமோஷனுக்காக பல்வேறு இடங்களுக்கு பறந்து கொண்டிருக்கும் மோகன் லாலிடம், மம்மூட்டிக்காக பூஜை செய்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மோகன் லால், "நண்பர் மும்மூட்டிக்கு கொஞ்சம் உடல்நலம் சரியில்லாமல் இருந்தது.

அதற்காக சபரிமலையில் பூஜை செய்தேன். ஆனால், அதை தேவஸ்தானம் போர்டில் இருப்பவர்கள் வெளியில் சொல்லி எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். அவருக்காக நான் பிரார்த்தனை செய்வது என்னுடய தனிப்பட்ட விஷயம். அது எங்கள் இருவருக்குமான நட்பு. இதில் என்ன தவறு இருக்கிறது" என்று பதிலளித்திருக்கிறார்.
மேலும், "மம்மூட்டிக்கு கவலைப்படும்படியாக ஏதுமில்லை, அவர் இப்போது நலமுடன் இருக்கிறார்" என்று கூறியிருக்கிறார்.