கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது!
Nani: எளிமையான, மனதை வருடும் படங்களே இன்றைய தேவை - ‘டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தைப் பாராட்டிய நானி
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பலர் நடித்திருக்கும் படம் `டூரிஸ்ட் ஃபேமிலி'.

'குட் நைட்', 'லவ்வர்' படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தைப் பார்த்த திரைப்பிரபலங்கள் பலரும் படக்குழுவினரைப் பாராட்டி இருந்தனர். இந்நிலையில் நடிகர் நானியும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தைப் பாராட்டி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில், “ எளிமையான, மனதை வருடும், நன்மைகளால் நிறைந்த படங்களே இன்றைய தேவை. அவற்றை கொடுத்துள்ளது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம். இப்படியான அற்புதமான படைப்பை கொடுத்த மொத்த குழுவிற்கும் நன்றி. மிகவும் தேவையான படம் இது” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
Simple, heart warming films with lot of goodness is what we deserve and #TouristFamily delivers just that. ♥️
— Nani (@NameisNani) May 26, 2025
Thanking the whole cast and crew who made this gem of a film. Much needed.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...