செய்திகள் :

NCP : `இறங்கி வந்த சரத் பவார்; கைவிரித்த அஜித் பவார்..!' - அணிகள் இணைப்பில் பின்னடைவு?

post image

மகாராஷ்டிராவில் 2023-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் இரண்டாக உடைந்தது. அஜித் பவார் அணிக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் இருந்ததால் அவரது அணியை தேர்தல் கமிஷன் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சியாக அறிவித்தது. இதையடுத்து சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு புதிய சின்னம் ஒதுக்கப்பட்டது. கட்சியை இரண்டாக உடைத்த பிறகு பல முறை சரத் பவாரை சந்தித்து இரு அணிகளும் ஒன்றாக செயல்படலாம் என்று அஜித் பவார் கேட்டுக்கொண்டார். ஆனால் சரத் பவார் அதற்கு மறுத்துவிட்டார்.

அதன் பிறகே தேசியவாத காங்கிரஸ் கட்சியை அஜித் பவார் தன் வசம் கொண்டு வந்தார். மகாராஷ்டிராவில் கடந்த மாதம் சட்டமன்ற தேர்தலில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளும் இணையவேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்தது.

அஜித் பவார்
அஜித் பவார்

இறங்கி வந்த சரத் பவார்... கைவிரித்த அஜித் பவார்!

இதுவரை அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைய எதிர்ப்பு தெரிவித்து வந்த சரத் பவார் சமீபத்தில் தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளார் என்ற தகவல் வெளியானது. தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்தால் ஆச்சரியப்பட வாய்ப்பில்லை என்றும், இரு அணிகளும் இணைவது குறித்து அஜித் பவாரும், சுப்ரியா சுலேயும் இணைந்து முடிவு செய்வார்கள் என்று சரத் பவார் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் புனேயில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய அஜித் பவார், ''இரு தேசியவாத காங்கிரஸ் அணிகளும் இணைய வாய்ப்பு இல்லை''என்று தெரிவித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அஜித் பவார் கட்சியின் மாநில தலைவர் சுனில் தட்கரே, ''இரு அணிகளும் இணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படவில்லை''என்று தெரிவித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அஜித் பவார் கட்சியின் மற்றொரு தலைவர், ``எங்களது கட்சியில் இருந்து இது தொடர்பாக சரத் பவார் கட்சி நிர்வாகிகள் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை'' என்று தெரிவித்தார்.

சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருக்கும் முக்கிய தலைவர்கள் தங்களது எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அஜித் பவார் அணியில் சேருவது குறித்து பரிசீலித்து வருவதாக சரத் பவார் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் தெரிவித்தாக ஒரு தகவல் பரவுகிறது.

இதையடுத்து முக்கிய பதவிகளுக்கான கட்சி நிர்வாகிகளை மாற்ற சர த்பவார் முடிவு செய்துள்ளார். ஓரிரு மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க இருப்பதால் அதற்கு முன்பு இம்முடிவை எடுக்க சரத் பவார் திட்டமிட்டுள்ளார்.

Supreme Court -க்கு Droupadi Murmu -ன் 14 கேள்விகள்- Stalin கண்டனம் | BJP |Imperfect Show 15.5.2025

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* AIR FORCE விமானத்தில் பறந்தபடி மீண்டும் ட்ரம்ப் பேச்சு!* பகல்காம் தாக்குதல்: ஐ.நாவிடம் ஆதாரத்தைக் கொடுத்து இந்தியா!* The Resistance Front - ஐ.நா-வில் இந்தியா முறையீடு?*... மேலும் பார்க்க

Turkey: 'நோ பர்மிஷன்' - பாகிஸ்தானுக்கு உதவிய துருக்கி; இந்தியாவின் நடவடிக்கை!

கடந்த மே 7 டு மே 10-ம் தேதி இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே இருந்த பதற்ற நிலையில், பாகிஸ்தானுக்கு மிகுந்த ஆதரவை வழங்கியிருந்தது துருக்கி. இதற்கு பதிலடி தருவது போல, இந்தியாவில் உள்ள துருக்கி நிறுவனத்தின... மேலும் பார்க்க

`பிரதமர் மோடியின் போர் ராஜ தந்திரத்தை உலக நாடுகள் பாராட்டுகின்றன!’ – புகழும் புதுச்சேரி அதிமுக

புதுச்சேரி அ.தி.மு.க-வின் மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் பதவியேற்றதில் இருந்து, அரசு அனுப்பும் அனைத்து மக்கள் நலத்திட்டங... மேலும் பார்க்க

Trump: "இந்தியா - பாக். பிரச்னையை நான்தான் சரிசெய்தேன் என்று கூறவில்லை, ஆனால்..." - ட்ரம்ப்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியான இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூருக்கு' பின், பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு, இந்தியாவும் தாக்குதல் நடத்த... இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் மிகுந்த ... மேலும் பார்க்க

`ஜம்மு & காஷ்மீர் மக்களுக்கு என்னுடைய சல்யூட்; பாகிஸ்தானால் இதை மறக்க முடியாது!' - ராஜ்நாத் சிங்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஶ்ரீநகரில் ராணுவ வீரர்கள் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது..."உங்களை (ராணுவ வீரர்கள்) காண்பதில் நான் பெருமை கொள்கிறேன். பிரதமர்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: அரசு மருத்துவமனையில் மது போதையில் நோயாளிகளுக்கு சிகிச்சை; வெளியேற்றப்பட்ட மருத்துவர்!

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள், உள் மற்றும் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற... மேலும் பார்க்க