செய்திகள் :

Operation Sindoor: ``கண்களில் கண்ணீர் வந்துவிட்டது"- பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் பேட்டி

post image

பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்வினையாற்றும் வகையில் இந்திய அரசு பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியிலும், பாகிஸ்தானிலும் ஆப்ரேஷன் சிந்தூர் எனும் பெயரில் தாக்குதலை நடத்தியிருக்கிறது. இந்தத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதாகவும், 35 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து ஊடகங்களிடம் பேசியிருக்கின்றனர்.

பிரகதி ஜக்தாலே
பிரகதி ஜக்தாலே

அதில் பஹல்காமில் கொல்லப்பட்ட சந்தோஷ் ஜக்தாலேவின் மனைவி, பிரகதி ஜக்தாலே, ``அந்தத் தீவிரவாதிகள் எங்கள் மகள்களின் சிந்தூரத்தை அழித்தார்கள்.... அவர்களுக்கு இந்தத் தாக்குதல் பொருத்தமான பதில். இந்தத் தாக்குதலுக்கான பெயரைக் கேட்டதும், என் கண்களில் கண்ணீர் வந்தது. அரசுக்கு மனதார நன்றி கூறுகிறேன். மோடி இந்த பதிலின் மூலம் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவார் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றொருவரான சுபம் திவேதியின் மனைவி அஷான்யா திவேதி, "என் கணவரின் மரணத்திற்கு பழிவாங்கியதற்காக அரசுக்கு நன்றி. இது ஆரம்பம். தீவிரவாதிகளை முற்றிலுமாக அழிக்கும் வரை மோடி நிறுத்த மாட்டார் என்பது எனக்குத் தெரியும். பயங்கரவாத இடங்கள் அனைத்தும் அழிக்கப்படும் என்ற நம்பிக்கையை அவர் எங்களுக்கு அளித்துள்ளார்.

அஷான்யா திவேதி
அஷான்யா திவேதி

Operation Sindoor முடியவில்லையா? - விமானப்படை சொல்வதென்ன?

இந்தியா பாகிஸ்தான் இடையே போர்-பதற்றம் முடிவுக்கு வந்து போர் நிறுத்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் நேற்று இரவில் பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையில் ஆபரேஷன் சி... மேலும் பார்க்க

India - Pakistan: `அமெரிக்காவின் தலையீடு குறித்து விவாதிக்க வேண்டும்' - ராகுல் காந்தி கடிதம்

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்தியது.இதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு தீவிரவாத மையங்கள் அழிக்கப்பட்டன.இதனால் பாகிஸ்தான... மேலும் பார்க்க

India - Pakistan : "முடிவெடுப்பதில் இரு நாடுகளுக்கும் உதவ முடிந்ததில் பெருமை கொள்கிறேன்" - ட்ரம்ப்

பஹல்காம் தாக்குதலுக்கு (ஏப்ரல் 22) பதிலடியாக, தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் (மே 7) நடத்தியது. அதைத் தொடர்ந்து, மே 8-ம் தேதி இரவு ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகள் மீது பாகிஸ்தான் ட்ர... மேலும் பார்க்க

”திமுக ஆட்சி மத்தியில் கூட்டணி ஆட்சி, மாநிலத்தில் குடும்ப ஆட்சியாக மாறிவிட்டது”-சீமான்

தஞ்சாவூரில் தமிழ்த்தேசிய பேரியக்கம் சார்பில் கூட்டரசுக் கோட்பாடு சிறப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பெ.மணியரசன், சீமான், கி.வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிறைவாக சீமான் பேசியதாவது, "மத்தியி... மேலும் பார்க்க

`இந்தியா, பாக் பிரச்னையில் அமெரிக்கா ஏன்..?' - காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கேள்வி!

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்தியது. இதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு தீவிரவாத மையங்கள் அழிக்கப்பட்டன. இதனால் பாகிஸ்த... மேலும் பார்க்க

India - Pakistan : "பாகிஸ்தான் அதை நிறுத்தும்வரை நிரந்தர அமைதியே கிடையாது" - ஒவைசி சொல்வதென்ன?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு (ஏப்ரல் 22) பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் (மே 7) நடத்தியது... மேலும் பார்க்க