செய்திகள் :

Pakistan: "ஒரு சொட்டு தண்ணீரைக் கூட பறிக்க முடியாது" - ஷெபாஸ் ஷெரிஃப் எச்சரிக்கை!

post image

இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதல் நிறுத்தத்துக்கு வந்தாலும், சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்திய முடிவில் இருந்து இந்தியா பின்வாங்காது என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

முன்னதாக சிந்து நதி நீரை நிறுத்தி வைப்பது போர் நடவடிக்கையாகக் கருதப்படும் என பாகிஸ்தான் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இருந்தும் இந்தியா அதன் முடிவிலிருந்து பின் வாங்கவில்லை.

Pakistan பிரதமர் பேசியதென்ன?

சிந்து நதி
சிந்து நதி

தற்போது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப், பாகிஸ்தானுக்கு சொந்தமான ஒரு சொட்டு நீரைக் கூட இந்தியாவை அபகரிக்க விடமாட்டோம் எனப் பேசியிருக்கிறார்.

"நான் எதிரிகளுக்கு இன்று சொல்கிறேன். நீங்கள் எங்கள் தண்ணீரை நிறுத்தி வைக்க நினைத்தால், இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் உங்களால் எங்களது ஒரு சொட்டு தண்ணீரைக் கூட அபகரிக்க முடியாது" எனக் கூறியிருக்கிறார் ஷெரிஃப்.

மேலும் இந்தியா அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால், "உங்கள் காதுகளைப் பிடித்துக்கொண்டே இருக்கும்படியான பாடம் கற்பிக்கப்படும்" என்றும் கூறியுள்ளார்.

அசிம் முனீர்
அசிம் முனீர்

"சிந்து நதி இந்தியாவின் குடும்பச் சொத்து அல்ல"

ஒருநாள் முன்னதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநீக்கம் செய்வது சிந்துவெளி நாகரீகத்தின் மீதான தாக்குதல் என்றும், இதை வைத்துப் போருக்கு கட்டாயப்படுத்தினாலும் பாகிஸ்தான் தயங்காது என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் மக்கள் முன்னிலையில் உரையாற்றிய ராணுவ தளபதி அசீம் முனீர், இந்தியா தண்ணீரை நிறுத்த எந்த அணை கட்டினாலும் பாகிஸ்தான் அதை உடைக்கும் எனப் பேசியிருந்தார்.

"சிந்து நதி ஒன்றும் இந்தியர்களின் குடும்பச் சொத்து அல்ல. நதியை நிறுத்த இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளை தகர்த்தெறிவதற்கான பொருட்களுக்கு எந்த பஞ்சமும் இல்லை" எனக் கூறியிருந்தார்.

'முதலமைச்சருக்கு திரைப்படங்களைப் பார்ப்பதற்கே பொழுதுகள் போதவில்லை' - அன்புமணி கண்டனம்

சென்னை ரிப்பன் மாளிகையில் போராடும் தூய்மை பணியாளர்கள் தொடர்பாக அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " சென்னையில் இராயபுரம், திருவிக ந... மேலும் பார்க்க

Ramadoss Vs Anbumani - யார் கை ஓங்கியிருக்கிறது | Off The Record

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே நடந்து வரும் மோதல் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது. இந்த விவகாராத்தில் இந்த இருவரைத் தவிர வேறு சில நபர்களுக்கும் தொடர்பிருப்பது குறித்து விளக்குகிறது இந்த வீட... மேலும் பார்க்க

`பாசக்கரம் நீட்டும் ராமதாஸ் டு மன்னர் புள்ளிகளைத் தேடும் கழகங்கள்!’ | கழுகார் அப்டேட்ஸ்

கொதிக்கும் மலர்க் கட்சி சீனியர்கள்!எதிர்த் தரப்பு எம்.எல்.ஏ-வுடன் விருந்து...மலர்க் கட்சியின் மாநிலப் பொறுப்பிலுள்ள ‘சக்கர’ புள்ளி ஒருவர், சூரியக் கட்சியின் முக்கியமான எம்.எல்.ஏ ஒருவரைத் தனது படை, பரி... மேலும் பார்க்க

துணை முதல்வர் பதவி: `அண்ணன் துரைமுருகன் இருக்க வேண்டிய இடம் அதிமுக’ - எடப்பாடி பழனிசாமி சூசகம்

அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, நேற்று (ஆகஸ்ட் 13) மாலை திருப்பத்தூர் மாவட்டத்தில் `மக்களைக் காப்போம்... தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணம் மேற்கொண்டார். திருப்பத்... மேலும் பார்க்க