செய்திகள் :

Paranthu Po: "இது நல்ல படம்; விமர்சகர்கள் பாதம் தொட்டுக் கேட்டுக் கொள்கிறேன்..!" - இயக்குநர் பாலா

post image

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'பறந்து போ' திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

பெற்றோர் - பிள்ளைகளுக்கிடையான உறவை, அன்பை பேசும் இப்படத்தில் மிர்ச்சி சிவா, அஜூ வர்கீஸ், கிரேஸ் ஆண்டனி எனப் பலரும் நடித்திருக்கிறார்கள். சுதந்திரத்தை விரும்பும் குழந்தை, தனது பெற்றோரையும் சுதந்திரத்தை நோக்கி அழைத்துச் செல்லும் இலகுவான கதைக்களம் இது.

பறந்து போ

ராம் - யுவன் காம்போ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் முதலில் யுவன்தான் படம் முழுக்க இசை அமைக்க வேண்டியிருந்தது. ஆனால், யுவன் அந்த சமயத்தில் வேறு சில பெரிய படங்களில் பரபரப்பாக இருந்ததால், இப்படத்தின் பின்னணி இசையை மட்டும் அமைத்திருக்கிறார். பாடல்களை சந்தோஷ் தயாநிதி அமைத்திருக்கிறார்.

இதன் வெளியீட்டையொட்டி சிறப்புத் திரையிடலை படக்குழுவினர் ஏற்பாடு செய்து சினிமா துறையில் இருக்கும் பலருக்கும் இப்படத்தைத் திரையிட்டுக் காட்டி வருகின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் பாலா

இதில் பேசியிருக்கும் இயக்குநர் பாலா, "மாரி செல்வராஜ் தனது படம்போல இங்கும் அங்கும் அலைந்து இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க துடித்துக் கொண்டிருக்கிறார். இயக்குநர் ராமுக்கு இப்படியானவர்கள் கிடைத்ததில் மகிழ்ச்சி. இது நல்ல படம். இதை மக்களிடம் கொண்டு சேர்க்க நம்ம எல்லாரும் சேர்ந்து ஏதாவது பண்ணனும். இப்படத்தை எப்படியாவது மக்களிடம் கொண்டு சேர்த்துவிடுங்கள், விமர்சகர்களின் பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறேன். ராம் மாதிரியான இயக்குநர் நம் தமிழ்நாட்டிற்கு வேண்டும்." என்று உணர்ச்சிமிகுந்து பேசியிருக்கிறார்.

3BHK: `என்னோட மனைவி, சொந்த வீடு இல்லைன்னு ரொம்ப வருத்தப்பட்டாங்க..!' - மாரி செல்வராஜ்

'எட்டுத் தோட்டாக்கள்' ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் '3BHK'.இப்படம் வரும் ஜூலை 4ம் தேதி திரையரங்... மேலும் பார்க்க

3BHK: "இந்த காலத்தில் சொந்த வீடு எதற்கு என்று நினைத்தேன்; ஆனால்..." - நடிகர் சரத்குமார்

'எட்டுத் தோட்டாக்கள்' ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் '3BHK'.இப்படம் வரும் ஜூலை 4ம் தேதி திரையரங்... மேலும் பார்க்க

3BHK: "இது என்னோட 40-வது படம்; படம் ஓடுதா இல்லையோ, ஆனால்..!" - நடிகர் சித்தார்த் உருக்கம்

'எட்டுத் தோட்டாக்கள்' ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் '3BHK'.இப்படம் வரும் ஜூலை 4ம் தேதி திரையரங்... மேலும் பார்க்க

3BHK: `பிறந்தது சொந்த வீட்டில்; இப்போ வாடகை வீட்டில்தான் இருக்கிறேன்...' - நடிகர் ரவி மோகன்

'எட்டுத் தோட்டாக்கள்' ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் '3BHK'.சென்னை போன்றதொரு பெரு நகரில் சொந்த வ... மேலும் பார்க்க

3BHK: "நாங்கள் இருவருமே அப்பள்ளியை விட்டு வெளியே வரவேயில்லை!" - சித்தார்த் குறித்து இயக்குநர் ராம்