நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எந்தவித தளா்வும் இருக்காது: மத்திய...
Parenting: "குழந்தை வளர்ப்பு உங்கள் மூளையை மழுங்க செய்யுமா?" - அறிவியல் சொல்வது என்ன?
குழந்தை வளர்ப்பு நம்மைச் சோர்வடையச் செய்து மூளையை மழுங்கச் செய்யும் என்ற நீண்டநாள் நம்பிக்கையை உடைத்து, குழந்தைகள் பெற்றுக்கொள்வது உங்கள் மூளை இளமையாகவும் கச்சிதமாகவும் வைத்திருக்கும் எனக் கூறுகிறது Proceedings of the National Academy of Sciences (PNAS) என்ற அமெரிக்க அறிவியல் இதழ் வெளியிட்ட புதிய ஆய்வு.
37,000 வயது வந்த நபர்களை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. பெற்றோர்களின் மூளை செயல்பாடுகள் பற்றி நடத்தப்பட்ட மிகப் பெரிய ஆய்வு இதுதான் என்கின்றனர்.
குழந்தை வளர்ப்பில் (Parenting) இருக்கும் சோர்வு, மன அழுத்தம் போன்ற சவால்களையும் கடந்து, ஒரு மனிதரின் வாழ்க்கையை வளப்படுத்தும் என்றும் அறிவாற்றல், உடல் செயல்பாடு மற்றும் சமூக தொடர்புகளைப் பெருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
அதிக குழந்தைகளைப் பெற்று வளர்ப்பது, மூளையின் விரிவான செயல்பாடுகள் வலுப்பெற வழிவகுக்கும் என்றும், குறிப்பாக அசைவுகள் மற்றும் உணர்திறன் தொடர்புடைய இணைப்புகளைச் செம்மைப்படுத்தும் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இந்த மூளை இணைப்புகள் வயதாகும்போது நலிவடையக் கூடியவை. இதனைக் கொண்டு, குழந்தை வளர்ப்பு மூளை வயதாவதைக் குறைப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆண்களிலும், பெண்களிலும் மூளை வயதாவதைக் குழந்தை வளர்ப்பு ஒரே மாதிரியாகவே பாதிப்பதாகக் கூறுகின்றனர்.
பொதுவாகக் குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் பங்களிப்பே ஆய்வு செய்யப்படும் நிலையில், இந்த ஆய்வில் 17,000 ஆண்கள் பங்குபெற்றுள்ளனர்.
ஆண்கள் கர்ப்பம் மற்றும் பிரசவத்தை அனுபவிப்பதில்லை என்றாலும் குழந்தை வளர்ப்பு ஆண்களின் மூளை ஆரோக்கியத்தை ஆழமாகப் பாதிப்பதாக ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வை வழிநடத்திய அவ்ரம் கோம்ஸ் என்ற உளவியல் பேராசிரியர், அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்வது மூளையில் சிறந்த தாக்கத்தைச் செலுத்துகிறது எனக் கூறியுள்ளார்.
ஆனாலும் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே என்பதனால் உலகம் முழுவதுக்கும் ஒரு திட்டவட்டமான அனுமானத்தைக் கொண்டுவரக் கூடுதல் ஆய்வுகள் தேவை என்கின்றனர்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks