தமிழ்நாட்டிலேயே தேர்வர்களுக்கான மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்- இபிஎஸ்
Passport: மத்திய அரசின் புதிய விதிமுறைகள்... இனி பாஸ்போர்ட் பெற இந்த சான்றிதழ் கட்டாயம்!
டிரிப், படிப்பு, வேலை... - எதற்கு வெளிநாடு செல்ல வேண்டுமானாலும், பாஸ்போர்ட் மிக அவசியம். சுற்றுலா முதல் அலுவல் நிமித்தமாக பல லட்ச மக்கள் இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். இவை அத்தனைக்கும் பாஸ்போர்ட் தேவை.
சமீபத்தில் மத்திய அரசு பாஸ்போர்ட் பெறுவதில் புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது. அவை...
1. 2023 அக்டோபர் 1ஆம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள், பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும்போது பிறந்த தேதியை உறுதிப்படுத்த பிறப்பு சான்றிதழ் கட்டாயம் வேண்டும். இதற்காக ( வயதை உறுதிப்படுத்த) இதை தவிர மற்ற எந்த ஆவணத்தையும் பிறந்த தேதிக்கான ஆதாரமாக பயன்படுத்த முடியாது.
ஆனால், 2023 அக்டோபர் 1-க்கு முன்பு பிறந்தவர்கள், பிறப்பு சான்றிதழ் இல்லாவிட்டாலும், பிறந்த தேதியை உறுதிப்படுத்த மாற்று ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். அதாவது, அங்கீகரிக்கப்பட்ட பள்ளியின் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், அரசு ஊழியர்களின் பணி ஆணை, வாக்காளர் அட்டை, காப்பீட்டு பத்திரம் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க அனுமதி உண்டு.
2. பாதுகாப்பு காரணத்திற்காக, இனி பாஸ்போர்ட்டில் முகவரிகள் அச்சிடப்படாது. அதற்கு பதிலாக அதிகாரிகள் ஸ்கேன் செய்து தெரிந்துகொள்வது மாதிரி கியூ.ஆர் கோடு இருக்கும்.

3. இனி பாஸ்போர்ட் மக்களுக்கு நீல நிறத்திலும், அரசு அதிகாரிகளுக்கு வெள்ளை நிறத்திலும், தூதரக அதிகாரிகளுக்கு சிவப்பு நிறத்திலும் வழங்கப்படும்.
4. இதுவரை பாஸ்போர்ட்டில் அச்சிடப்பட்டு வந்த பெற்றோர் பெயர் இனி அச்சிடப்படாது. சிங்கிள் பேரண்ட், பிரிந்த சென்ற பெற்றோரின் பிள்ளைகளின் தனியுரிமை காக்க இந்த ஏற்பாடு.
பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்பத்தினை ஆன்லைனிலேயே விண்ணப்பிக்க முடியும் அல்லது பாஸ்போர்ட் சேவா கேந்திரா (PSK) அல்லது அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவா கேந்திராவிற்கு (POPSK) செல்லலாம்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks