செய்திகள் :

PBKS vs RR: ``அணிக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி'' - மீண்டும் கேப்டனான சஞ்சு சாம்சன்

post image

ஐபிஎல் இன்றைய (ஏப்ரல் 5) போட்டியில் ராஜஸ்தான் அணியும், பஞ்சாப் அணியும் நேருக்கு நேர் களமிறங்கின. காயம் காரணமாக முதல் மூன்று போட்டிகளில் கேப்டனாக செயல்படாமல் இம்பேக்ட் பிளேயராக பேட்டிங் மட்டும் செய்துவந்த சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாகத் திரும்பியிருக்கிறார்.

மறுபக்கம், முதல் இரண்டு போட்டிகளில் பெற்ற வெற்றியை இந்தப் போட்டியிலும் தொடரும் முனைப்பில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வுசெய்தார்.

PBKS vs RR - ஸ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன்
PBKS vs RR - ஸ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன்

அதைத்தொடர்ந்து பேசிய ஸ்ரேயஸ் ஐயர், ``கடந்த ஆட்டத்தைப் பார்க்கையில் புதிய பிட்சில் ஆடுகிறோம். பிட்சின் தன்மை எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க விரும்புகிறோம். நாங்கள் இங்கு பயிற்சி ஆட்டங்களில் விளையாடியிருப்பதால் பிட்ச் எப்படி செயல்படும் என்பது எங்களுக்குத் தெரியும். சாம்பியன்களின் மனநிலை எங்களிடம் இருக்கிறது. அணியில் எந்த மாற்றமும் இல்லை. ஒருவேளை, இம்பேக்ட் பிளேயருடன் மாற்றம் கொண்டுவரப்படலாம்" என்று கூறினார்.

அவரைத்தொடர்ந்து பேசிய சஞ்சு சாம்சன், ``அணிக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி. இதுவொரு புதிய அணி, புதிய நிர்வாகம். ஒருவரையொருவர் தெரிந்துகொள்ள கொஞ்சம் நேரம் எடுக்கும். நாங்கள் இப்போது சிறப்பாக விளையாடி வருகிறோம். கடந்த ஆட்டம் எங்களுக்கு சரியான ஆட்டமாக இருந்தது. துஷார் தேஷ்பாண்டேவுக்குப் பதில் யுத்விர் சிங் களமிறங்குவர்" என்று கூறினார்.

PBKS vs RR - ஸ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன்
PBKS vs RR - ஸ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன்

பஞ்சாப் பிளெயிங் 11:

பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயஸ் ஐயர் (c), மார்கஸ் ஸ்டய்னிஸ், நேஹல் வதேரா, மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், சூர்யன்ஷ் ஷெட்ஜ், மார்கோ யன்சன், அர்ஷ்தீப் சிங், லாக்கி பெர்குசன், யுஸ்வேந்திர சாஹல்

இம்பேக்ட் பிளேயர்ஸ்:

பிரியன்ஸ் ஆர்யா, ஹர்ப்ரீத் ப்ரார், பிரவீன் துபே, விஷ்ணு வினோத், வைஷாக் விஜய்குமார்

ராஜஸ்தான் பிளெயிங் 11:

ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(c), நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜோரல், ஷிம்ரோன் ஹெட்மயர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், தீக்ஷனா, யுத்வீர் சிங் சரக், சந்தீப் சர்மா

இம்பேக்ட் பிளேயர்ஸ்:

குணால் சிங் ரத்தோர், ஷுபம் துபே, ஃபசல்ஹக் ஃபரூக்கி, குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால்

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Bumrah: "வெல்கம் முஃபாஸா" - RCB-க்கெதிராக களமிறங்கும் பும்ரா? சூடுபிடிக்கும் ஐபில்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஜஸ்பிரித் பும்ரா, இந்த சீசன் ஐபிஎல்லில் இன்னும் களமிறங்காதது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவாக இருக்கிறது. மும்பை ரசிகர்களும் பும்ரா எப்போது வருவார் என்... மேலும் பார்க்க

SRH vs GT: `மொதல்ல 200 அடிங்க பாஸ்' - குஜராத்திடம் சைலன்ட் ஆன கம்மின்ஸ் & கோ

ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணியும் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று (ஏப்ரல் 6) நேருக்குநேர் களமிறங்கின. கடைசி ... மேலும் பார்க்க

Hemang Badani : 'சிஎஸ்கே வீரர் டு டெல்லி கோச்!' - சேப்பாக்கத்தில் சம்பவம் செய்த தமிழக வீரர் பதானி

'பிளாஷ்பேக்!'சேப்பாக்கத்தில் சென்னை அணியை 15 ஆண்டுகள் கழித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீழ்த்தியிருக்கிறது. இதில், சுவாரஸ்யமான விஷயம் ஒன்றும் இருக்கிறது. அதாவது, இதற்கு முன் கடைசியாக டெல்லி கேப்பிட்டல... மேலும் பார்க்க

Dhoni : `அடையாளத்தை இழக்காதீர்கள்' - எங்கள் ஹீரோவாகவே ஓய்வை அறிவியுங்கள் தோனி

'சென்னை தோல்வி!'சேப்பாக்கத்தில் நடந்த டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோற்றிருக்கிறது. தோல்வி என்பதைத் தாண்டி மோசமான தோல்வி, மோசமான அணுகுமுறை. தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் இயன்றவரை போராடும் குணம்... மேலும் பார்க்க