செய்திகள் :

PMK: "உழவர்களைக் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கும் கொடுங்கோல் ஆட்சி" - திமுக மீது அன்புமணி தாக்கு

post image
திருவண்ணாமலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் இணை அமைப்பான தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு நடைபெற்றது. பா.ம.க-வின் நிறுவனரும், உழவர் பேரியக்கத்தின் நிறுவனருமான மருத்துவர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.

இந்த மாநாட்டில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, ``இன்றைய காலகட்டத்தில் எங்களைப் போன்று தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சியும் கிடையாது. உழவர்களைப் பற்றி எந்த அரசியல் கட்சிக்கும் கவலை கிடையாது. அதிலும், குறிப்பாக ஆளுகின்ற திராவிட மாடல் ஆட்சி, முதலாளிகளுக்காக நடத்துகின்ற ஆட்சி. அவர்களுக்கு விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாது. உழவன் என்றாலும் யாரென்று தெரியாது. முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், விவசாயத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. இவர்கள் ஏமாற்றியது போதும்.

எல்லோரும் அய்யாவின் பின்னால் வாருங்கள். நாங்கள் போட்டிருக்கின்ற 45 தீர்மானங்களையும் தமிழக அரசு நிறைவேற்றினாலே போதும். தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக எல்லா வகையிலும் மாறும் என்பதில் சந்தேகமே கிடையாது. 5 திணைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு. இதுபோன்ற மாநிலம் இந்தியாவில் வேறு எதுவும் கிடையாது. அப்படிப்பட்ட மாநிலத்தில் விவசாயிகளின் நிலை பரிதாபமாக இருக்கிறது.

அன்புமணி

விவசாயிகளை மீட்டெடுக்க நாங்கள் இருக்கிறோம். வெற்று வார்த்தைகளால் இனியும் ஏமாறாதீர்கள். ஆட்சி மாற்றம் வர வேண்டும். விவசாயிகளின் விளைச்சலுக்கு விலை வேண்டும். நீங்கள் இலவசமாகப் போடுகின்ற பிச்சை எங்களுக்கு வேண்டாம். நாங்கள் தன்மானமாக வாழ வேண்டும். எங்கள் விளைச்சலுக்கு நியாயமான விலை கொடுத்தால் போதும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 1,200 ஏக்கர் விளை நிலத்தை எடுத்து அறிவுசார் நகரம் என்கிற பெயரில் அமெரிக்காவில் உள்ள ஓர் நிறுவனத்துக்குக் கொடுக்கப் போகிறார்களாம். அவர்கள் வந்து தமிழ்நாட்டு மக்களுக்கு அறிவூட்டப் போகிறார்களாம். நீங்கள் இதை எடுத்து நடத்துங்கள். ஆனால், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடியில் தரிசு நிலங்கள் அதிகமாக இருக்கின்றன. உணவளிக்கின்ற மண்ணை அழித்து அப்படியொரு நகரம் தேவையே கிடையாது.

திருவண்ணாமலை மாவட்டத்திலும் மேல்மா பகுதியில் சிப்காட் உருவாக்குவதற்காக 3.500 ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதைத் தடுத்து நிறுத்தியது பாட்டாளி மக்கள் கட்சி. அங்கு இருக்கின்ற உழவர்கள் நீண்ட காலமாகப் போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்துக்கு முழு ஆதரவு நாம் கொடுத்தோம்.

உலகத்தில் எத்தனையோ கொடுங்கோல் ஆட்சியை நாம் பார்த்திருக்கிறோம். அந்த கொடுங்கோல் ஆட்சியில்கூட உழவர்களைச் சிறைபிடித்து குண்டர் சட்டத்தில் யாரும் போடவில்லை. ஆனால், இப்போது நடக்கின்ற கொடுங்கோல் தி.மு.க ஆட்சியில் 7 விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதற்குப் பிறகும் இவர்களை ஆதரிக்க வேண்டும்?

கொலைகாரன், கொள்ளைக்காரன், கஞ்சா விற்பவன், கள்ளச்சாராயம் விற்பவனைத்தான் குண்டர் சட்டத்தில் போடுவார்கள். ஆனால், மண்ணுக்காகப் போராடுகின்ற விவசாயிகளையே குண்டர் சட்டத்தில் போடுவதுதான் தி.மு.க ஆட்சி. இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார். அவரை நான் அமைச்சராகப் பார்க்கவில்லை. வியாபாரியாகத்தான் பார்க்கிறேன். இதுபோன்ற இரண்டு, மூன்று வியாபாரிகள் முதலமைச்சரைச் சுற்றி இருக்கிறார்கள். `எங்களுக்குத் தொழிற்சாலைகள் வேண்டும். நீங்கள் போராடினால் நாங்கள் தொழிற்சாலைகளை ஆகாயத்திலா கட்ட முடியும்’ என்று பேசுகிறார் அந்த அமைச்சர்.

அன்புமணி

இதேநிலை தொடர்ந்தால் உங்களுக்குச் சோறு கிடைக்காது. சோற்றுக்கு வெளிநாட்டில் பிச்சை எடுப்பீர்களா? அந்த நிலை வரக்கூடாது. வரவும் விட மாட்டோம். தமிழ்நாட்டில் ஒரு சென்ட் விளைநிலம் எங்கு எடுத்தாலும் அங்கு முதலில் நிற்பவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியும், இந்த அன்புமணி ராமதாஸும்தான். எங்களுக்கு மட்டும்தான் வலிக்கிறது. காரணம், நாங்கள் பாட்டாளிகள். தி.மு.க-வில் இருப்பவர்கள் முதலாளிகள். தமிழக அரசு உடனடியாக விளை நிர்ணயம் ஆணையத்தை உருவாக்க வேண்டும். விளைபொருள் கொள்முதல் ஆணையத்தையும் உருவாக்க வேண்டும். விவசாயிகளுக்கு மகிழ்ச்சியூட்ட வேண்டும். விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தால்தான் அது உண்மையான வளர்ச்சியாக இருக்கும். விவசாய பெருமக்களே எங்கள் கரத்தை நாங்கள் நீட்டுகின்றோம். உங்கள் கரத்தால் எங்கள் கரத்தைப் பிடியுங்கள். இருவரும் கரம் கோர்ப்போம். தமிழ்நாட்டை மீட்டெடுப்போம். தமிழ்நாட்டைக் காப்பாற்றுவோம். அதற்கு ஆட்சி அதிகாரம் வேண்டும். அந்த மாற்றம் விவசாயிகளால் மட்டுமே முடியும். 63 விழுக்காடு விவசாயிகள் ஒன்று சேர்ந்தால் மிகப்பெரிய மாற்றம் வரும். அதற்கு எல்லா விவசாயிகளும் வாருங்கள். எங்களுக்கு ஆதரவு தாருங்கள்’’ என்றார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PorattangalinKathai

Sri Lanka: "கடன் நிலுவையை அடைத்துவிட்டோம்; ஆனாலும்..." - இலங்கை நிதி அமைச்சகம் சொல்வதென்ன?

2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. காய்கறி முதல் பெட்ரோல் வரை தட்டுப்பாடு நிலவியது.இந்நிலையில், தற்போது ஹாங்காங்கை சேர்ந்த ஃபிட்ச் ரேட்டிங் (நம் நாட்டின் சிப... மேலும் பார்க்க

PMK: "10 அம்ச கோரிக்கைகளுடன் போர் நினைவுச் சின்னத்தை முற்றுகையிடுவோம்" - கொதிக்கும் ராமதாஸ்

திருவண்ணாமலையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக உழவர் பேரியக்க மாநில மாநாடு நேற்று (டிசம்பர் 21) நடைபெற்றது.இந்த மாநாட்டில் பா.ம.க-வின் நிறுவனரும், தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் நிறுவனருமான மருத்துவர்... மேலும் பார்க்க

GST: பாப்கார்னுக்கு 18 சதவிகித ஜி.எஸ்.டி; அதிர்ச்சியான மக்கள்; விளக்கமளிக்கும் நிர்மலா சீதாராமன்

பேக் செய்யப்பட்ட பாப்கார்னுக்கு 12 சதவிகித ஜி.எஸ்.டியும், கேரமல் பாப்கார்னுக்கு 18 சதவிகித ஜி.எஸ்.டியும் விதிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் கிளப்பியது.இதை தெளிவுப்படுத்தும் விதமாக ஜி... மேலும் பார்க்க

பாமக உழவர் மாநாடு: 'நீரா பானம்; ஆக்கிரமிப்பு ஏரிகளை மீட்க தனி வாரியம்' - நிறைவேறிய 45 தீர்மானங்கள்

திருவண்ணாமலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் இணை அமைப்பான `தமிழ்நாடு உழவர் பேரியக்கம்’ சார்பில் உழவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தும் வகையில் மாநில மாநாடு நடைபெற்றது.பா.ம.க நிறுவனர் மருத்துவர் ... மேலும் பார்க்க

பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஸ்டேஷன் மாஸ்டருக்கு விருது; தகவல் கூறியவர்களையும் கெளரவிக்க கோரிக்கை!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிந்து வருபவர் ஜாபர் அலி. கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி கனமழை மற்றும் வெள்ளம் பெருக்கெடுத்தது. திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: சுட்டிக்காட்டிய விகடன்; பயன்பாட்டுக்கு வந்த பெண்கள் கட்டணமில்லா கழிவறை!

திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகே, நகராட்சி சார்பில் பெண்களின் நலன் கருதி `கட்டணமில்லா சிறுநீர் கழிப்பிடம்' புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கழிவறை முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டும்,... மேலும் பார்க்க